மக்கள் ஆதரவு பெருக பொறுப்பும் கடமையும் கூடுகிறது – முதல்வர் ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுரை

Tamil Nadu CM MK Stalin: தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக நிர்வாகிகளுக்கு தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலை வலியுற்றுள்ளார். அதில் பல்வேறு விஷயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். வெற்றியைப் பெற்றுத் தர நீங்கள் அனைவரும் அயராது பாடப்பட வேண்டும் என தொண்டர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

மக்கள் ஆதரவு பெருக பொறுப்பும் கடமையும் கூடுகிறது - முதல்வர் ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுரை

முதலமைச்சர் ஸ்டாலின்

Published: 

13 Jul 2025 16:39 PM

சென்னை, ஜூலை 13, 2025: தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். குறிப்பாக வளர்ச்சி என்பது என்னால் மட்டுமானது அல்ல உங்கள் ஒவ்வொருவரின் ஆக்கபூர்வமான நடவடிக்கையால் வளர்ந்ததே என குறிப்பிட்டுள்ளார். திமுகவினரின் மனக்குரலை அறிந்து கொள்ளவே உடன்பிறப்பே வா எனும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் பத்து மாத காலங்களே இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் அடுத்த முறையும் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற கண்ணோட்டத்தோடு தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தேர்தலை சந்திக்க ஆயத்தமாகும் திமுக:

குறிப்பாக திமுக தரப்பில் ஓரணியில் தமிழ்நாடு, உடன்பிறப்பே வா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட நிர்வாகிகளையும் மக்களையும் சந்தித்து வருகிறார். அதேபோல் மாவட்டம் தோறும் சென்று அங்கு கள ஆய்வும் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் தஞ்சாவூர் வேலூர் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் சாலை வலம் மேற்கொண்டு மக்களை சந்தித்தும் வந்தார்.

நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்:

தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக நிர்வாகிகளுக்கு தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலை வலியுற்றுள்ளார். அதில் பல்வேறு விஷயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். வெற்றியைப் பெற்றுத் தர நீங்கள் அனைவரும் அயராது பாடப்பட வேண்டும் என தொண்டர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

மக்கள் ஆதரவு பெருக பொறுப்பும் கடமையும் கூடுகிறது – முதல்வர் ஸ்டாலின்:


ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் இதுவரை 77 லட்சத்து 34 ஆயிரத்து 937 திமுகவில் இணைந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உடன்பிறப்பே வா எனும் தலைப்பில் தொகுதிவாரியாக கழக நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடி அவர்களுக்கு உற்சாகமூட்டி புத்தகங்கள் வழங்கி கலந்துரையாடி தொகுதி நிலவரம் குறித்த கேட்டறியப்படுகிறது. மக்கள் ஆதரவு பெறுக பெறுக பொறுப்பும் கடமையும் கூடுகிறது. எதிர்பார்ப்பு அதிகமாகின்றது.

மேலும் படிக்க: அதிமுகவின் தேர்தல் வியூகம்.. 2ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை அறிவித்த இபிஎஸ்.. முழு விவரம்!

அதனை காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும். அதிகமாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன். வளர்ச்சி என்பது என்னால் மட்டும் ஆனதல்ல. உங்கள் ஒவ்வொருவரின் அதிகாரப்பூர்வமான நடவடிக்கையால் வளர்ந்து வரும். இந்த வெற்றியை பொறுத்த பெற்று தர நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும்” என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது