முதலமைச்சர் ஸ்டாலினின் திருவாரூர் பயணம்.. இரண்டாம் நாள் திட்டம் என்ன?
TN CM MK Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருவாரூர் சென்றுள்ளார். இரண்டாம் நாளான இன்று (ஜூலை 10, 2025) அரசு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார், அதே போல் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

திருவாரூர், ஜூலை 10, 2025: தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று களப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் தஞ்சை வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு கள ஆய்வை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து தற்போது திருவாரூர் மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார். ஜூலை 9, 2025 தேதியான நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவாரூர் சென்றார். இந்தப் பயணத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது, சாலை வளம் மேற்கொள்வது என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் திருவாரூர் பயணம்:
இரண்டாவது நாளான இன்று அதாவது ஜூலை 10 2025 தேதியான இன்று சன்னதி தெருவில் இருந்து புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் எஸ் எஸ் நகரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி கலந்து கொண்டு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார். அதேசமயம் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல் இந்த அரசு நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.




இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஜூலை 10 2025 தேதியான இன்று திருச்சியில் இருந்து விமான மூலம் சென்னைக்கு வருகை தருகிறார். இந்த இரண்டு நாள் பயணத்தின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ட்ரோன், ரிமோட் மூலம் இயங்கும் வான் பொருள் உள்ளிட்டவைக்கு பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் அருங்காட்சியகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் திருவாரூர் மாவட்டம், காட்டூர், கலைஞர் கோட்டத்தில் உள்ள கலைஞர் அருங்காட்சியகம் முத்துவேலர் நூலகம், கலைஞரின் கலைபாதை ஒலியும் ஒளியும், கலைஞரின் அரசியல் பாதை ஒலியும் ஒளியும் போன்றவற்றை பார்வையிட்டார். #CMStalinInThiruvarur pic.twitter.com/UlGyKLJpta
— DMK (@arivalayam) July 9, 2025
முதல் நாளான நேற்று ஜூலை 9 2025 அன்று திருவாரூரில் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் உள்ள, கலைஞர் அருங்காட்சியகம் முத்துவேலர் நூலகம், கலைஞரின் கலை பாதை ஒளியும் ஒலியும், கலைஞரின் அரசியல் பாதை ஒளியும் ஒலியும் போன்றவற்றை பார்வையிட்டார். அதேபோல் திருவாரூரில் மக்களை சந்திப்பதற்காக சாலை வலம் மேற்கொண்டார். இதில் மக்கள் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் ஸ்டாலின் இந்த இரண்டு நாள் திருவாரூர் பயணம் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது அரசியல் பிரச்சாரத்தை மேற்கொள்வார் என கூறப்படுகிறது. அதேபோல் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியும் தனது தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூரில் தொடங்குவது வழக்கம்.