பள்ளி கல்லூரி விடுதிகள்.. இனி சமூகநீதி விடுதிகள் என அழைக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்
CM MK Stalin: அரசு தரப்பில் பள்ளி கல்லூரிகளில் இருக்கும் விடுதிகள் இனி சமூக நீதி விடுதிகள் என அழைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது தவிர மாணவர்களுக்கான உரிமைகள் சலுகைகள் உதவிகள் அனைத்தும் அப்படியே தொடரும் அதில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூலை 7, 2025: ஏழை எளிய மாணவர்களுக்கான பள்ளி கல்லூரி விடுதிகள் இனி சமூக நீதி விடுதிகள் என அழைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “ ஜாதி வேறுபாடுகள் ஏற்ற தாழ்வுகளை முற்றிலுமாக விளக்கும் பயணத்தின் பல்வேறு படிநிலைகளை படிப்படியாக தாண்டி வர வேண்டும். இதற்கான முயற்சிகளில் திராவிட மாடல்ல அரசு தொடர்ந்து பயணித்து வருகிறது. ஜூன் 25 2025 அன்று பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுடைய ஜாதி மற்றும் சமூக வேறுபாடுகள் கருத்து வேறுபாடுகள் வன்முறை உணர்வுகள் உருவாவதை தடுக்கும் நல்லிணக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்க்கவும் பண்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டது.
பள்ளி கல்லூரி விடுதிகள்:
நமது சமுதாயத்தின் பல்வேறு பின் தங்கிய பிரிவுகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் தொடர்ந்து கல்வி பயில நமது மாநிலம் எங்கும் பல்வேறு அரசு துறைகளையும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறையினர் செயல்பட்டு வரும் 727 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 41 ஆயிரத்து 194 மாணவ மாணவிகளும், 455 மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 26 ஆயிரத்து 653 மாணவ மாணவிகளும், 157 சீர்மரபினர் விடுதிகளில் 9,372 மாணவ மாணவிகளும், 20 சிறுபான்மையினர் நல விடுதிகளில் 1,250 மாணவ மாணவிகளும் தங்கி பயின்று வருகின்றனர்.
அரசு விடுதிகளில் தங்கியுருக்கும் 1,79,568 மாணவர்கள்:
“தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு!#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@mkstalin pic.twitter.com/yYcbbqDzDZ
— TN DIPR (@TNDIPRNEWS) July 7, 2025
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1,332 ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் 98,909 மாணவ மாணவியர்கள், 48 பழங்குடியினர் விடுதிகளில் 20,190 மாணவ மாணவியர்கள் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். இவ்வாறு தமிழ்நாட்டில் மொத்தமாக இருக்கும் 20,739 விடுதிகளில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 568 மாணவ மாணவியர்கள் தாங்கியுள்ளனர். இந்த மாணவ மாணவிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படி பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் சமூக நீதி விடுதிகள் என பொதுப் பெயரில் இனி அழைக்கப்படும். விடுதிகளுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது தவிர மாணவர்களுக்கான உரிமைகள் சலுகைகள் உதவிகள் அனைத்தும் அப்படியே தொடரும் அதில் எந்த மாற்றமும் இருக்காது. பெருந்தலைவர்களின் பெயர்களோடு இயக்கப்பட்டு வரும் விடுதிகள் அதே பெயரோடு சமூக நீதி விடுதி என்ற பெயரும் சேர்த்து அழைக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது