ADMK Exit Poll Result: வெளியான தேர்தல் கருத்துக்கணிப்பு.. ஆட்சியை கைப்பற்றுமா அதிமுக? எத்தனை சதவீத வாக்குகள் பெரும்?

ADMK Assembly Election Exit Poll Result: தமிழகத்தைப் பொறுத்தவரையில், மீண்டும் திமுக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், சில கருத்துக்கணிப்புகளில் மட்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு சுமார் 50% அளவில் இருக்கலாம் என சில கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ADMK Exit Poll Result: வெளியான தேர்தல் கருத்துக்கணிப்பு.. ஆட்சியை கைப்பற்றுமா அதிமுக? எத்தனை சதவீத வாக்குகள் பெரும்?

கோப்பு புகைப்படம்

Updated On: 

29 Apr 2026 21:05 PM

 IST

ஏப்ரல் 29, 2026: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நிறைவடைந்தது. இந்த நிலையில், வருகிற மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். மேற்குவங்கத்தின் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு முடிந்த நிலையில், மாலை 6:30 மணி முதல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

மீண்டும் ஆட்சி அமைக்குமா அதிமுக?

தமிழகத்தைப் பொறுத்தவரையில், மீண்டும் திமுக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், சில கருத்துக்கணிப்புகளில் மட்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழக வெற்றிக் கழகம் புதிதாக களம் இறங்கியிருந்தாலும், குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகள் பெற்றிருப்பதாகவும், சுமார் 10 முதல் 30 இடங்கள் வரை வெற்றி பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 169 தொகுதிகளை எட்டி பிடிக்கும் திமுக.. 55% வாக்குகளை அசராமல் அடிக்கும்.. கருத்து கணிப்பில் தகவல்!

மேலும், அதிமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு சுமார் 50% அளவில் இருக்கலாம் என சில கணிப்புகள் தெரிவிக்கின்றன. பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், அதிமுக 60 முதல் 140 இடங்கள் வரை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

  • People’s Insight: அதிமுக – 60 முதல் 70 இடங்கள்
  • Axis My India: அதிமுக – 22 முதல் 32 இடங்கள்
  • PMARQ: அதிமுக – 65 முதல் 85 இடங்கள்
  • MATRIZE: அதிமுக – 87 முதல் 110 இடங்கள்
  • Vote Vibe: அதிமுக – 114 முதல் 124 இடங்கள்
  • JVC: அதிமுக – 128 முதல் 147 இடங்கள் (ஆட்சி அமைக்கும் வாய்ப்பு)
  • PEOPLE’S PULSE : அதிமுக – 65 முதல் 80 இடங்கள்

இந்த கணிப்புகளின் அடிப்படையில், சில இடங்களில் அதிமுக மீண்டும் எதிர்க்கட்சியாக அமைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், Vote Vibe மற்றும் JVC போன்ற சில நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகளில் அதிமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்புகள் எப்போதும் துல்லியமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. மே 4ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில்தான் மக்கள் யாரை தேர்வு செய்துள்ளனர், அடுத்த ஐந்து ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார் என்பது தெளிவாக தெரியும்.

 

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..