Tamil Nadu Election 2026 Live: நெருங்கும் தேர்தல்… இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி!

Tamil Nadu Election 2026 Live: 5 மாநில தேர்தல் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. ஏப்ரல் 23ம் தேதி தமிழகத்துக்கு சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தேர்தல் அப்டேட்களை உடனுக்குடன் பார்க்கலாம்

Tamil Nadu Election 2026 Live: நெருங்கும் தேர்தல்... இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி!

தமிழ்நாடு தேர்தல் நேரலை

Updated On: 

15 Apr 2026 09:21 AM

 IST

LIVE NEWS & UPDATES

  • 15 Apr 2026 10:12 AM (IST)

    நாகர்கோவில் – ட்ரோன்கள் பறக்க தடை

    பிரதமர் மோடி இன்று நாகர்கோவில் வருகை தருவதை அடுத்து அங்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

  • 15 Apr 2026 09:54 AM (IST)

    என்ன விழிப்புணர்வு?

    தேர்தல் நடைபெறும் விடுமுறை நாளில் நாம் அனைவரும் வாக்குச்சாவடிக்கு தவறாமல் சென்று வாக்களித்து நமது உரிமையினை நாட்டிடுவோம். வாக்காளர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம். மேலும் விவரங்களுக்கு https://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

  • 15 Apr 2026 09:44 AM (IST)

    வாட்ஸ் ஆப்பில் விழிப்புணர்வு

    தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து சென்னை மாவட்டத்தில் சுமார் 11.50 லட்சம் வாக்காளர்களுக்கு ஏப்ரல் 23- ஆம் தேதி நாம் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்வோம் என்ற வாசகத்துடன் வாட்ஸ் ஆப்பில் விழிப்புணர்வு செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது.

  • 15 Apr 2026 09:25 AM (IST)

    100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு

    தேர்தல் ஆணையம் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

  • 15 Apr 2026 09:19 AM (IST)

    சேலம், தருமபுரியில் இன்று ஸ்டாலின் பிரசாரம்

    திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முக ஸ்டாலின் இன்று சேலம் மற்றும் தருமபுரியில் வாக்கு சேகரிக்கிறார். சேலத்தில் பெண்கள் மாநாடும் நடக்கவுள்ளது

  • 15 Apr 2026 09:12 AM (IST)

    Vijay Chennai campaign : சென்னையில் விஜய் பிரசாரம்

    சென்னையில் இன்று 3 தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார் தவெக தலைவர் விஜய். டிநகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர் பகுதிகளில் விஜய் பிரசாரம் செய்யவுள்ளார்

  • 15 Apr 2026 08:56 AM (IST)

    வீட்டை சூழ்ந்த திமுகவினர்!?

    சுமார் 200-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் அந்த வீட்டை சூழ்ந்திருந்ததால், அதிகாரிகள் தங்கள் பணியை சுதந்திரமாக செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடைபெறுகிறது

  • 15 Apr 2026 08:45 AM (IST)

    MK Stalin : தருமபுரியில் ஸ்டாலின் பரப்புரை

    தருமபுரி பாலக்கோடு பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டு பிரச்சாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின். அங்கிருந்தவர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

  • 15 Apr 2026 08:42 AM (IST)

    பறக்கும் படை அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லை – திலகபாமா

    பணப்பட்டுவாசா  சம்பவம் தொடர்பாக, “தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லை” என்று திலகபாமா வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் அதிகாரிகளும் காவல்துறையும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றன என குற்றம்சாட்டினார்.

  • 15 Apr 2026 08:25 AM (IST)

    தேர்தல் பறக்கும் படையை உடனே அனுமதிக்கவில்லையா?

    கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பாமக வேட்பாளர் திலகபாமா, தேர்தல் பறக்கும் படையினருக்கும் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படையினரை உடனடியாக உள்ளே அனுமதிக்காமல், சுமார் 2 மணி நேரம் திமுகவினர் தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

  • 15 Apr 2026 08:13 AM (IST)

    பெரம்பூர் பகுதியில் பணப்பட்டுவாடா?

    சென்னை பெரம்பூர் 44வது வட்டத்திற்குட்பட்ட பகுதியில் கார் ஒன்றில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் விநியோகிப்பதாக பாமக வேட்பாளர் குற்றச்சாட்டு

  • 15 Apr 2026 07:56 AM (IST)

    PM Modi Covai visit : ஏப்ரல் 18ம் தேதி கோவை வரும் பிரதமர் மோடி

    இதேபோல, வருகிற 18-ஆம் தேதி கோவையில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார்.  சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பிரம்மாண்ட  கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றி இருந்தார்.

  • 15 Apr 2026 07:46 AM (IST)

    மாலையே டெல்லி திரும்பும் பிரதமர்

    ரோடு ஷோ நிறைவடைந்த பிறகு மாலை 5:45 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். பின்னர், அங்கிருந்து மாலை 6:20 மணியளவில் தனி விமானத்தில் டெல்லி செல்கிறார்.

  • 15 Apr 2026 07:26 AM (IST)

    தீவிர வாக்கு சேகரிப்பில் பிரதமர் மோடி

    ரோடு ஷோவில் பங்கேற்கும் பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

  • 15 Apr 2026 07:15 AM (IST)

    ரோடு ஷோவில் பங்கேற்கும் பிரதமர் மோடி

    மாலை 4:30 முதல் 5:30 வரை வேப்பமூடு பகுதியில் இருந்து வடசேரி வரை சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரம்மாண்ட ரோடு ஷோ வில் பங்கேற்கிறார்.

  • 15 Apr 2026 07:06 AM (IST)

    மாலை 4 மணிக்கு நாகர்கோவில்

    டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி வந்தடைகிறார். அங்கிருந்து இன்று பிற்பகல் 3:30 மணிக்கு தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 4:10 மணி அளவில் நாகர்கோவில் வந்து சேர்கிறார்

  • 15 Apr 2026 07:02 AM (IST)

    PM Modi TN Visit : இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி

    பிரதமர் நரேந்திர மோடி இன்று புதன்கிழமை ( ஏப்ரல் 15) நாகர்கோவிலில் ரோடு ஷோ மேற்கொண்டு தீவிர பரப்புரை பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. தேர்தல் நெருங்கி உள்ளதால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று நாகர்கோவிலில் ரோடு ஷோ மேற்கொண்டு ஆதரவு திரட்டுகிறார். இதே போல, திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெவ்வேறு பகுதிகளில் தீவிர பரப்புரை பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தேர்தல் கால அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

Follow Us
Related Stories
நம் ஓட்டு நம் உரிமை.. வாட்ஸ் ஆப் வழியாக வீடு தேடி வரும் தேர்தல் விழிப்புணர்வு.. தேர்தல் ஆணையம் மாஸ் பிளான்!
சட்டமன்ற தேர்தல்.. சிறையில் இருந்து ஜனநாயக கடமை… 61 கைதிகளுக்கு வாக்களிக்க வாய்ப்பு!
“அதிமுக, பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் விஜய்”.. திருமாவளவன் பகிரங்கக் குற்றச்சாட்டு!!
ஊழல் அரசியல்வாதிகள் ரத்தம் கக்க வேண்டும்.. சுடுகாட்டில் விபரீத பூஜை செய்த சுயேட்சை வேட்பாளர்.. முழு விவரம் உள்ளே!
பிரதமர் மோடி நாகர்கோவில் வருகை.. 1.5 கி.மீ பிரம்மாண்ட ரோடு ஷோ.. குலுங்கப்போகும் குமரி!
Arakonam Constituency Election 2026: இந்தியாவின் முக்கிய ரயில்வே ஜங்ஷன்களில் ஒன்றான அரக்கோணம் தொகுதி.. மக்கள் முன்வைக்கும் முக்கிய பிரச்சனை என்ன?
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்