ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டியே… ஒன்னு “TVK” இன்னொன்னு “AVK”… அரசியல் பரபரப்புக்கு மத்தியில் பவர் ஸ்டாரின் புதிய கட்சி!

Power Star Srinivasan : தமிழகத்தில் அரசியல் களம் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்துக்கு போட்டியாக அண்ணா வளர்ச்சிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, விஜய்க்கு எதிராக போட்டியிடப்போவதாக காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டியே... ஒன்னு TVK இன்னொன்னு AVK... அரசியல் பரபரப்புக்கு மத்தியில் பவர் ஸ்டாரின் புதிய கட்சி!

டிவிகேவுக்கு எதிராக பவர் ஸ்டார் புதிய கட்சி தொடக்கம்

Updated On: 

23 Mar 2026 10:45 AM

 IST

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மத்தியில் கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை, வேட்பாளர்கள் நேர்காணல், வேட்பாளர்கள் அறிவிப்பு என தமிழக அரசியல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி, திராவிட முன்னேற்ற கழக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி தேர்தலில் களம் காண உள்ளன. இதனால், தமிழக மற்றும் புதுச்சேரியில் 4 முனை போட்டி நிலவி வருகிறது. இதில், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தனித்து களம் காண உள்ளன. இந்த நிலையில், தமிழக அரசியலில் புது வரவான தமிழக வெற்றி கழகம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்குமே போட்டி என்ற நிலைப்பாட்டில் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் இருந்து வருகிறார்.

தவெக தலைவர் விஜய்க்கு எதிராக புதிய கட்சி

மேலும், விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநில மாட்டில் இருந்து தற்போது நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி வரை இதே கருத்தை முன் வைத்து வருகிறார். இதனால், அவரது கட்சியை சேர்ந்தவர்களும் இதை கருத்தை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும், எனக்கும் தான் போட்டி என புதிதாக ஒரு நபர் குரல் எழுப்ப தொடங்கி உள்ளார். அவர் வேறு யாருமில்லை… நம்ம பவர் ஸ்டார் தான்… இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது.

மேலும் படிக்க: NDA கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு.. யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?.. ஆலோசிக்க சென்னை வருகிறார் பியூஸ்கோயல்..

அரசியல் களத்தில் விஜய்க்கும், எனக்கும் தான் போட்டி

நான் அண்ணா வளர்ச்சிக் கழகம் (ஏவிகே) என்ற கட்சியை விரைவில் தொடங்க இருக்கிறேன். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை எனது தம்பியாக நான் கருதினாலும், அரசியல் களம் என்று வந்துவிட்டால் எனக்கு போட்டி விஜய் தான். அவரது கட்சி டி. வி. கே. எனது கட்சி ஏ. வி. கே. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எனது கட்சியான ஏ. வி. கே. போட்டியிடும். இதனால், தமிழகத்தில் இரண்டே இரண்டு கட்சிகளுக்கு இடையே தான் போட்டியே, ஒன்று டிவிகே மற்றொன்று ஏவிகே.

தனித்து போட்டி அல்லது திமுகவுக்கு ஆதரவு

தற்போது தான் எனது கட்சிக்கு பெயர் சூட்டி உள்ளேன். தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான பணிகளில் தாமதம் ஏற்பட்டால் அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன் அல்லது திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பேன் என்று கூறினார்.

மேலும் படிக்க: வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் உதவி மையம்- செல்போன்கள் வைப்பு அறை… இன்னும் புதிய வசதிகள்… தேர்தல் ஆணையம் அதிரடி!

Follow Us
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..