திமுக உடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்? விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் – டி.கே.எஸ் இளங்கோவன்..

திமுகவைப் பொறுத்தவரையில், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இடம் பெற்ற கூட்டணி கட்சிகள் பெரும்பாலும் அப்படியே தொடர்கின்றன. புதிதாக மக்கள் நீதி மையம் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

திமுக உடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்? விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் - டி.கே.எஸ் இளங்கோவன்..

கோப்பு புகைப்படம்

Updated On: 

09 Feb 2026 07:39 AM

 IST

சென்னை, பிப்ரவரி 9, 2026: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் பரபரப்பாக தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஆளும் திமுக கட்சித் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே சமயம், தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுகவும், இந்த முறை தேர்தலில் எப்படியாவது குறிப்பிடத்தக்க இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

திமுக உடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்?

இரு தரப்பினருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், கூட்டணிகள் குறித்த பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) திமுகவுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இது தொடர்பாக நல்ல செய்தி விரைவில் வரும் எனவும் திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து விவகாரம்…தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மீது பாய்ந்த நடவடிக்கை!

திமுகவைப் பொறுத்தவரையில், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இடம் பெற்ற கூட்டணி கட்சிகள் பெரும்பாலும் அப்படியே தொடர்கின்றன. புதிதாக மக்கள் நீதி மையம் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

கூட்டணி பேச்சுகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள சூழலில், திமுக தரப்பில் தேமுதிக மற்றும் ராமதாஸ் தலைமையிலான பாமக ஆகியோருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தேமுதிகவைப் பொறுத்தவரையில், பிப்ரவரி 17 ஆம் தேதிக்குள் அதன் கூட்டணி நிலைப்பாடு அறிவிக்கப்படும் என பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்திருந்தார்.

விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் – டி.கே.எஸ் இளங்கோவன்:

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக மற்றும் ராமதாஸ் தலைமையிலான பாமக என இரு தரப்புகள் உள்ளன. இதில், அன்புமணி தரப்பு பாமக ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், ராமதாஸ் தரப்பு பாமக வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கைகோர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. இதன் காரணமாக தந்தை மற்றும் மகன் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில், தற்போது வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ராமதாஸ் தரப்பு திமுகவுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “பாமக ராமதாஸ் தரப்பு திமுகவுடன் பேசி வருவதாக கேள்விப்பட்டேன். அது குறித்து தற்போது வெளியில் சொல்ல முடியாது. இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்” என தெரிவித்தார். சூடு பிடிக்கும் அரசியல் களத்தில், எந்தக் கட்சி எந்தக் கூட்டணியில் சேரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

150 கோடி வசூல்.. ட்ரெண்டிங்கில் இருக்கும் சர்வம் மாய..
லெஜெண்ட் சரவணனின் புதிய படம்.. வெளியான லீடர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
சென்னையில் தீவிரமாக பரவும் பறவைக் காய்ச்சல் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மோடிஜி என் சகோதரனை மீட்டுத்தாருங்கள் - நடிகை ஜெலினா ஜெட்லி கண்ணீர் மல்க உருக்கம்