தவெக தலைவர் விஜய்க்கு முதல்வர் அந்தஸ்து பாதுகாப்பு ரத்து? கான்வாய் வாகனங்கள் வாபஸ்.. என்ன காரணம்!

Vijay Have Been Withdrawn Convoy Vehicles : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு எனப்படும் கான்வாய் வாகனங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. இதே போல, நீலாங்கரை வீட்டுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளன.

தவெக தலைவர் விஜய்க்கு முதல்வர் அந்தஸ்து பாதுகாப்பு ரத்து? கான்வாய் வாகனங்கள் வாபஸ்.. என்ன காரணம்!

விஜய்க்கு வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்கள் வாபஸ்

Updated On: 

07 May 2026 06:37 AM

 IST

தமிழக சட்டமன்ற தேர்தலில் புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகம் 108 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. ஆனால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் இல்லாத காரணத்தால் சில கட்சிகளிடம் ஆதரவு கோரி தமிழக வெற்றி கழகம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 112 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. எனினும் மேலும், 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மே 4- ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. அப்போது, விஜயின் வீட்டுக்கு போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் கூடுதல் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

தவெக தலைவர் விஜய்க்கு கான்வாய் வாகன பாதுகாப்பு

இதைத் தொடர்ந்து, காவல் துறையின் உயர் அதிகாரிகள் விஜயின் வீட்டின் வெளியே குவிய தொடங்கினர். பின்னர், அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து, தவெக தலைவர் விஜய் வெற்றி சான்றிதழ் வாங்குவதற்காக பெரம்பூர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரை பார்ப்பதற்காக சென்றார். அப்போது, விஜயின் வாகனத்தின் முன்னும், பின்னும் முதல்வருக்கு பாதுகாப்பு அளிக்கும் கான்வாய் வாகனங்கள் அணிவகுத்து சென்றன. அதாவது, முதல்வருக்கு வழங்கும் பாதுகாப்பு விஜய்க்கு வழங்கப்பட்டிருந்தது. கடந்த 2 நாட்களாக தவெக தலைவர் விஜய்க்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

மேலும் படிக்க: தொடங்கிய திமுக – அதிமுக பேச்சுவார்த்தை – கூட்டணி ஆட்சியா? பரபரப்பு தகவல்

விஜய்க்கான கான்வாய் வாகனங்கள் வாபஸ்

அதன்படி, நேற்று புதன்கிழமை ( மே 6) பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து விஜய் வீட்டுக்கு புறப்படுவதற்கு முன்னதாகவே கான்வாய் வாகனங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அவை தலைமைச் செயலகம் நோக்கி புறப்பட்டு சென்றது. இதில், 4 கான்வாய் வாகனங்கள் புறப்பட்ட நிலையில், அதில் காவல் துறையினர் மட்டுமே பாதுகாப்பில் இருந்தனர். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு முதல்வருக்கு வழங்கப்படும் சிறப்பு பாதுகாப்பு எனப்படும் கான்வாய் வாகனங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. இதன் காரணமாக கான்வாய் வாகனங்கள் எதுவும் இல்லாமல் விஜய் தனது நீலாங்கரை வீட்டிற்கு தனது காரில் புறப்பட்டு சென்றார்.

நீலாங்கரை வீட்டுக்கான பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டன

இதே போல, நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டுக்கு வழங்கப்பட்டு வந்த கூடுதல் போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், முதல்வர் பதவியில் இருப்பவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்புகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இதில், கான்வாய் வாபஸ் பெறப்பட்டதற்கு விஜய் தாமாக முன்வந்து கான்வாய் வாகனங்களை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவுக்கு அவகசாம் வழங்கிய ஆளுநர் – எப்போ வரை தெரியுமா?

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..