மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய ஆலோசனை..

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடக்கூடிய அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டிருந்தாலும், வாக்கு எண்ணிக்கையின் போது எந்தவிதமான குறைபாடும் இல்லாமல், ஒவ்வொரு சுற்றிலும் முடிவுகள் துல்லியமாக மேற்கொள்ளப்பட வேண்டும். விவரங்களை அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு எப்படி வழங்க வேண்டும், என்னென்ன விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அலுவலர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய ஆலோசனை..

கோப்பு புகைப்படம்

Published: 

30 Apr 2026 19:10 PM

 IST

சென்னை, ஏப்ரல் 30, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்க இருக்கிறது. இந்த சூழலில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்ட்நாயக் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவு அதிகப்படியான வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், வரக்கூடிய மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. தமிழகத்தில் 62 மையங்கள் அமைக்கப்பட்டு இந்த வாக்கு எண்ணிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனை:

இந்த சூழலில், வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்ட்நாயக் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

ஏப்ரல் 29ஆம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சென்னையில் பயிற்சி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளோடு இன்று அவர் ஆலோசனை நடத்தினார்.

மேலும் படிக்க: உழைப்பாளர் தினம்.. வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின் – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி..

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடக்கூடிய அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டிருந்தாலும், வாக்கு எண்ணிக்கையின் போது எந்தவிதமான குறைபாடும் இல்லாமல், ஒவ்வொரு சுற்றிலும் முடிவுகள் துல்லியமாக மேற்கொள்ளப்பட வேண்டும். விவரங்களை அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு எப்படி வழங்க வேண்டும், என்னென்ன விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அலுவலர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.

மேலும், தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தி முடிந்தது போலவே, வாக்கு எண்ணிக்கை பணியும் எந்தவிதமான சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளும் இல்லாமல் துரிதமாகவும் தெளிவாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு நாள் என்றால் அது மே 4ஆம் தேதி தான். அன்றைய நாள் எந்தக் கட்சி அடுத்த ஐந்து ஆண்டுகளை தமிழகத்தில் ஆட்சி செய்யப் போகிறது என்ற முடிவை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும்.

வழக்கமான சட்டமன்றத் தேர்தலைப் போல இல்லாமல், இந்த தேர்தல் களம் புதிதாக இருக்கிறது. கணிப்புகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், கடைசி நிமிடத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை உள்ளது. எனவே, இந்த தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Follow Us
Related Stories
வெற்றிப்பெற்று நேராக பனையூர் வாருங்கள்.. நான் காத்திருப்பேன் – வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுரை..
“வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கவனம் தேவை!”.. நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!!
அனைத்து மாநிலங்களிலும் தாமரை மலரும்.. பாஜக செய்தி தொடர்பாளர் செஷாத் பூனாவாலா!
கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்.. “விசில் புரட்சி வெடிக்கப்போகுது”.. செங்கோட்டையன் அதிரடி
மே 4 வாக்கு எண்ணிக்கை.. தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு.. தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு..
தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கடும் குழப்பம்!!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..