திமுகவின் ஒற்றை நோக்கம் இது தான்.. உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் அதிரடி தாக்கு!
Nainar Nagendran Latest Speech: தமிழகத்தின் முதல்வராக உதயநிதியை அமர வைப்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் ஒற்றை நோக்கமாக இருந்து வருவதாக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மேலும், மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்தார்.

உதயநிதியை முதல்வராக்குவதே திமுவினரின் ஒற்றை நோக்கம்
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு முடிவு கட்டும் தேர்தல் நடைபெற உள்ளது. நாளை கோவையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேச உள்ளார். நாகர்கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட பிரம்மாண்ட ரோடு ஷோவில் மக்களின் எழுச்சியை பார்க்க முடிந்தது. இதேபோல, மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வருகிற ஏப்ரல் 19- ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ரோடு மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று அனைத்து பெண்களும் விரும்புகின்றனர். நான் சாத்தூரில் பரப்புரை மேற்கொண்ட போது எங்களுக்கு பணம் வேண்டாம் மதுக்கடைகள், போதை பொருட்களை ஒழித்தால் போதும் என்று பெண்கள் கூறினர்.
அனைத்திலும் குறை கூறும் முதல்வர் ஸ்டாலின்
இதற்காகவே, பாராளுமன்றத்தில் 33 சதவீத பெண்கள் இடம்பெற வேண்டும் என்பதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொகுதி வரையறை சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. அதே வேளையில் ஆண்களுக்கான இட ஒதுக்கீடும் குறைந்து விடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அனைத்து விவகாரங்களிலும் குறை கூறி போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
மேலும் படிக்க: தவெக தலைவர் விஜய் மீது 3 வழக்குப்பதிவு.. விதிகளை மீறி பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு!
பெண்கள் – மாநிலங்களுக்கு இடமளிப்பது காலத்தின் கட்டாயம்
தமிழகத்துக்கும், டெல்லிக்கும் போட்டி என்ற ஒற்றை வார்த்தையே மு. க. ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். வளர்ந்து வரும் காலத்துக்கு ஏற்ப பெண்களுக்கும், மாநிலங்களுக்கும் இடம் அளிப்பது காலத்தின் கட்டாயமாகும். அதன் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களிலும் எம்பிக்களின் எண்ணிக்கை சீராக அதிகரிக்கப்பட உள்ளது. உலகில் பல்வேறு நாடுகளில் போர் நடைபெற்று வருகிறது. ஆனால், பிரதமர் மோடியால் இந்தியா மட்டும் அமைதியாக இருந்து வருகிறது. வளைகுடா நாடுகளில் வேறு நாட்டின் கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், இந்திய கப்பல்கள் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உதயநிதியை முதல்வராக்குவதே நோக்கம்
தமிழகத்தின் முதல்வராக உதயநிதி ஸ்டாலினை கொண்டு வர வேண்டும் என்பதை திமுகவினரின் ஒற்றை நோக்கமாக உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தேஜ கூட்டணிக்கும்- திமுக கூட்டணிக்கும் இடையே தான் போட்டி. ஆளுங்கட்சியாக வர முடியாத தமிழக வெற்றிக்கழகம் எது வேண்டுமானாலும் கூறலாம். அவர்களின் தேர்தல் அறிக்கையை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்?.. ரகசியம் உடைத்த இபிஎஸ்..
Follow Us
Assembly ElectionsBharatiya Janata Party (BJP) – Tamil NaduDMKMK StalinNainar NagendranUdhayanidhi Stalinதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்