எத்தனை முதலமைச்சர்கள் வந்தாலும் அதிமுக – பாஜக கூட்டணியை பிரிக்க முடியாது – நயினார் நாகேந்திரன்

ADMK BJP Alliance: தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சேர்ந்து எடுத்த முடிவு இது. இது நயினார் நாகேந்திரன் அல்லது மேடையில் இருப்பவர்களின் தனிப்பட்ட முடிவு அல்ல. இது ஒரு இயற்கையான கூட்டணி என நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.

எத்தனை முதலமைச்சர்கள் வந்தாலும் அதிமுக - பாஜக கூட்டணியை பிரிக்க முடியாது - நயினார் நாகேந்திரன்

கோப்பு புகைப்படம்

Published: 

08 Nov 2025 06:40 AM

 IST

சேலம், நவம்பர் 8, 2025: அதிமுக–பாஜக இடையேயான கூட்டணி என்பது இயற்கையான கூட்டணி. தமிழ்நாட்டில் நல்லாட்சி வரவேண்டும் என்பதற்காக அமைந்த கூட்டணி என தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அரசியல் களம் பரபரப்பாக தொடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. அதாவது திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகள். இதில் திமுக தரப்பில் கூட்டணியில் இதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை; அதே கட்சிகள் கூட்டணியில் தொடர்ந்து உள்ளன.

மீண்டும் அமைந்த அதிமுக பாஜக கூட்டணி:

ஆனால் அதிமுகவைப் பொறுத்தவரையில், 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வரும் நிலையில், ஏப்ரல் 2025 உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த சூழலில், தேர்தல் பணிகளை இரு கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அதிமுக தரப்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தாண்டி மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, அதிமுகவில் உள்ளகக் கட்சி விவகாரங்கள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

மேலும் படிக்க: இனி கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயங்காது – பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு – காரணம் என்ன?

அதிமுக தரப்பில் கட்சி பணிகளும் அரசியல் நகர்வுகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கூட்டணியில் உள்ள பாஜக தரப்பிலும் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. குறிப்பாக பூத் கமிட்டிகளை அமைத்தல், தேர்தல் களம் எப்படி இருக்கிறது, எந்தெந்த தொகுதிகள் சாதகமாக உள்ளன என்பதற்கான பல்வேறு கோணங்களில் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மாவட்டம் தோறும் சென்று சுற்றுப்பயணமும் பரப்புரையும் மேற்கொண்டு வருகிறார்.

கள்ள ஓட்டுகளை சேகரித்து வைத்துள்ள திமுக – நயினார் நாகேந்திரன்:

அந்த வகையில் சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் நயினார் நாகேந்திரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வாக்காளர் திருத்தப்பட்டியல் தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் அதனை நடத்தக்கூடாது என அனைத்து கட்சிகளும் கூட்டம் நடத்துகின்றன. ஏனெனில் முதலமைச்சர் ஸ்டாலின் அவருடைய தொகுதியில் 9,000 ஓட்டுகள் அதிகமாக உள்ளன. எல்லா திமுக அமைச்சர்களின் தொகுதிகளிலும் சுமார் 10,000 முதல் 15,000 வாக்குகள் அதிகமாக உள்ளன. போலி வாக்காளர்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள். இதற்காகத்தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதற்காகத்தான் இந்த ஆட்சி தொடரக்கூடாது,” என தெரிவித்தார்.

மேலும் படிக்க: கோவையில் பெண் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் – வீடியோ மூலம் உண்மையை சொன்ன பெண் – அதிர்ச்சி தகவல்

அதிமுக பாஜக இயற்கையான கூட்டணி:

அவர் மேலும் தெரிவித்ததாவது: “தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சேர்ந்து எடுத்த முடிவு இது. இது நயினார் நாகேந்திரன் அல்லது மேடையில் இருப்பவர்களின் தனிப்பட்ட முடிவு அல்ல. இது ஒரு இயற்கையான கூட்டணி; நாட்டில் நல்லாட்சி வரவேண்டும் என்பதற்காக ஏற்பட்ட கூட்டணி.

இந்த கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் முதலமைச்சரின் மருமகன் ‘பெண்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதற்காக மாதம் மூன்று கோடி ரூபாய் செலவிடப்படுகின்றன. இப்படியாக இந்த கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றாலும், எத்தனை நிறுவனங்கள் வந்தாலும், எத்தனை முதலமைச்சர்கள் வந்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நிச்சயமாக ஆட்சியைப் பிடிப்போம். அதன் பின்னர் நிறைய பேர் எங்கு செல்வார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது,” என தெரிவித்தார்.

Related Stories
ஜெயலலிதாவிடம் பொய் சொன்னார்… 2011-ல் செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார்… ஓபிஎஸ் மீது வைகோ குற்றச்சாட்டு
எஸ்ஐஆர் திட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் – திமுக அறிவிப்பு
திருநெல்வேலியில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்… கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் எச்சரிக்கை
பூதாகரமாக வெடித்த உட்கட்சி விவகாரம்.. இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..
செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
SIR in India: எந்தெந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி..? எப்போது தொடக்கம்..? முழு விவரம் இதோ!