எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து டிடிவி தினகரன், அன்புமணி டெல்லி பயணம் – என்ன நடக்கிறது?

NDA Leaders Delhi Visit: தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ள நிலையில் அவரைத் தொடர்ந்து டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் டெல்லி சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து டிடிவி தினகரன், அன்புமணி டெல்லி பயணம் - என்ன நடக்கிறது?

எடப்பாடி பழனிசாமி - அன்புமணி ராமதாஸ் - டிடிவி தினகரன்

Published: 

19 Mar 2026 21:41 PM

 IST

சென்னை, மார்ச் 19 : தமிழக சட்டமன்ற தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மற்றும் அதிமுக இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சரும் பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் மார்ச் 19, 2026 அன்று தமிழ்நாடு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த ிலையில் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

அடுத்தடுத்து டெல்லி செல்லும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள்

இதனயைடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். இதனையடுத்து மார்ச் 20, 2026 அன்று நாளை அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக மற்றும் பாஜ இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக முடிவு எட்டப்படாத நிலையில் எடப்பாடி பழனிசாமி தற்போது அது குறித்து முடிவெடுக்க டெல்லி சென்றுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் வெகு சில நாட்களே உள்ள நிலையில் விரைவில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : பெண்கள் உயிரிழப்பில் அரசு அமைதி காப்பது ஏன்? தமிழிசை கேள்வி

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ள நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் தினகரன், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவிற்கு 10 தொகுதிகள் எதிர்பார்க்கும் நிலையில் அதிமுக சார்பில் 6 தொகுதிகள் மட்டுமே தர முன் வந்துள்ளதால் டிடிவி தினகரன் டெல்லி சென்றுள்ளார்.

இதையும் படிக்க : திமுகவுடன் சின்னம் தொடர்பான சர்ச்சை – என்ன முடிவெடுக்கப்போகிறார் கமல்?

அதே போல தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு மாநிலங்களவை இடத்தை பெற்றுள்ள நிலையில் மற்ற தொகுதிகள் குறித்து உடன்பாடு எட்டப்படாத நிலையில் அன்புணி ராமதாஸ் டெல்லி செல்வதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மார்ச் 20, 2026 அன்று 3 பேரும் தனித்தனியாக அமித் ஷாவை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன் வைக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் 2 நாட்களில் சென்னை வருகறார். அவர் வந்தவுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கும். அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் டெல்லியிலும் நடத்தலாம். எடப்பாடி பழனிசாமி உள்துறை அமித் ஷாவை வேறு காரணங்களுக்காக சந்தித்து பேசியிருக்கலாம் என தெரிவித்தார்.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்