வெறும் ரூ.50 முதலே முதலீடு செய்யலாம்.. இந்த திட்டங்களை நோட் பண்ணுங்க!

50 Rupees Investment Schemes In India | பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்கு முதலீடு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், வெறும் ரூ.50 முதலே முதலீடு செய்து, அதிக லாபம் பெற உதவும் சில அசத்தல் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

வெறும் ரூ.50 முதலே முதலீடு செய்யலாம்.. இந்த திட்டங்களை நோட் பண்ணுங்க!

மாதிரி புகைப்படம்

Updated On: 

03 Apr 2026 12:11 PM

 IST

மனிதர்களின் வாழ்வில் பொருளாதார பாதுகாப்பு (Financial Security) என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. அந்த பொருளாதார பாதுகாப்பை பெற சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. ஆனால், பெரும்பாலான பொதுமக்கள் சேமிப்பு அல்லது முதலீடு செய்வதற்கு ஏதுவான வருமானம் இல்லை என கூறி சேமிப்பு மற்றும் முதலீட்டில் கவனம் செலுத்தாமலே விட்டுவிடுகின்றனர். ஆனால், உண்மையில் வெறும் ரூ.50 முதலே சேமிப்பு அல்லது முதலீட்டை தொடங்க முடியும். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

குறைந்தபட்ச அளவில் இருந்தே முதலீட்டை தொடங்கலாம்

பெரும்பாலான சாமானிய மக்கள் தங்களிடம் போதுமான ஊதியம் இல்லை, இதனால் முதலீடு செய்ய முடியாது என நினைக்கின்றனர். ஆனால், அது உண்மை இல்லை ஒருவர் மிக குறைந்த அளவு முதலே முதலீடு செய்யலாம். உதாரணமாக, ஒருவர் மாதம் ரூ.15,000 வருமானம் பெறுகிறார் என்றால், தினமும் ரூ.50 முதலே முதலீடு செய்யலாம். அப்படியென்றால் ஒரு மாதத்திற்கு ரூ.1,500 முதலீடாக இருக்கும்.

இதையும் படிங்க : 5 கிலோ மினி சிலிண்டர்களின் விலை உயர்வு – எவ்வளவு தெரியுமா?

எந்த திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்

இந்த மாதம் ரூ.1,500 முதலீட்டை சாதாரனமாக கருத வேண்டும். இந்த சாதாரன முதலீட்டிலும் நல்ல தொகை பெற முடியும். நீங்கள் தினமும் ரூ.50 முதலீடு செய்தால் அது ஒரு மாதத்திற்கு ரூ.1,500 ஆக இருக்கும். இதுவே ஒரு ஆண்டுக்கு ரூ.18,250 ஆக இருக்கும். இந்த நிலையில், முதலீட்டை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் பட்சத்தில் வட்டியுடன் கூடிய நல்ல லாபத்தை பெற முடியும்.

இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் புக் பண்ணப்போறீங்களா? ரூ.200 சலுகை வழங்கும் பேடிஎம் – எப்படி பெறுவது?

  • 6 முதல் 7 சதவீதம் வட்டி வழங்கும் ஆர்டி (RD – Recurring Deposit) திட்டத்தில் நீங்கள் மாதம் ரூ.1,500 முதலீடு செய்கிறீர்கள் என்றால் 5 ஆண்டுகளில் திட்டத்தின் முடிவி வட்டியுடன் சேர்த்து ரூ.1.08 லட்சம் கிடைக்கும்.
  • ஒருவேளை 5 ஆண்டுகள் தொடர்ந்து நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்திருந்தீர்கள் என்றால், கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கம் 12 சதவீதம் லாபம் தந்துள்ளது. அந்த வகையில், மொத்தமாக ரூ.1.24 லட்சம் லாபமாக பெற்று இருப்பீர்கள்.
  • இதுவே 15 சதவீதம் லாபம் தரக்கூடிய பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) மூலம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் உங்கள் கையில் ரூ.1.31 லட்சம் இருக்கும்.
Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..