ஆதார் செயலி மூலமே முகவரி, மொபைல் எண்ணை சுலபமாக மாற்றலாம்.. எப்படி தெரியுமா?

Update Address and Mobile Number In Aadhaar App | ஆதாரில் விவரங்களை அப்டேட் செய்வது முன்பு சற்று கடினமாக இருந்த நிலையில், தற்போது மிக சுலபமானதாக மாறியுள்ளது. இந்த நிலையில், ஆதார் செயலி மூலம் முகவரி மற்றும் மொபைல் எண்ணை சுலபமாக மாற்றுவது எப்படி என விரிவாக பார்க்கலாம்.

ஆதார் செயலி மூலமே முகவரி, மொபைல் எண்ணை சுலபமாக மாற்றலாம்.. எப்படி தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Updated On: 

29 Jan 2026 13:00 PM

 IST

இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆதாரமாகவும், அடையாள அட்டையாகவும் உள்ளது தான் ஆதார் கார்டு (Aadhaar Card). இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority of India) இந்த ஆதார் கார்டை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. ஆதார் கார்டு மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ள நிலையில்,  அதில் ஏதேனும் சில தகவல்கள் தவறாக இருந்தால் அவற்றை திருத்தம் செய்ய இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணையதளத்திலோ அல்லது இ சேவை மையங்களுக்கோ சென்று தான் மேற்கொள்ள முடியும். இந்த நிலையில் தான் பொதுமக்களின் சிரமத்தை குறைத்து அவர்கள் எளிதாக சேவைகளை பெற அரசு ஆதார் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் ஆதாரில் மொபைல் எண் மற்றும் முகவரியை மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆதார் செயலி மூலம் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது

  1. கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து ஆதார் செயலியை பதவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.
  2. பிறகு உங்களது ஆதார் எண் மற்றும் பயோமெட்ரிக் அடையாளங்களை (Biometric Identifications) கொண்டு லாக் இன் செய்யுங்கள்.
  3. பிறகு முகப்பு பக்கத்தில் உள்ள சர்வீசஸ் (Services) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  4. பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர் அப்டேட் (Mobile Number Update) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  5. பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்த பிறகு அப்டேட் மொபைல் நம்பர் (Update Mobile Number) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  6. பிறகு உங்கள் மொபைல் எண்ணை பதிவிட்டு, ஓடிபியை பதிவிட வேண்டும்.
  7. பிறகு முக அடையாளத்தை பயன்படுத்தி, ரூ.75 கட்டணம் செலுத்தில் நிறைவு செய்ய வேண்டும்.

இந்த முறையை பின்பற்றி மொபைல் எண்ணை அப்டேட் செய்யும் பட்சத்தில் 15 நாட்களுக்குள்ளாக மொபைல் எண் மாற்றம் செய்யப்படும்.

இதையும் படிங்க : Bank Holiday : பிப்ரவரியில் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!

ஆதார் செயலி மூலம் முகவரியை அப்டேட் செய்வது

  1. மேற்குறிப்பிட்ட படியே செயலியை பதிவிறக்கம் செய்து சர்வீசஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  2. அதில் கொடுக்கப்பட்டுள்ள அட்ரஸ் அப்டேட் (Address Update) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  3. பிறகு உரிய ஆவணத்தை பதிவேற்றம் செய்து முகவரியை பதிவிட வேண்டும்.
  4. பிறகு முக அடையாளத்தை வைத்து வெரிஃபை செய்த பிறகு, அதற்காக ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டும்.

மொபைல் எண்ணை மாற்றம் செய்வதை போலவே முகவரியை மாற்றம் செய்வதற்கும் 15 நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த அழிந்துபோன பாம்பு இனம்
போர் சூழல்.. பதிலளிக்க தயாராக இருக்கும் ஈரான்..
மீண்டும் ஒரே மேடையில் ஏ.ஆர். ரஹ்மான் - விஜய் சேதுபதி.. எங்கு தெரியுமா?
அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்.. சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்கி குவித்த மக்கள்..