வீட்டில் இருந்தே சுலபமாக ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.. எப்படி தெரியுமா?

Apply For ATM Card By Sitting At Home | தற்போதைய காலக்கட்டத்தில் பண தேவையை பூர்த்தி செய்ய ஏடிஎம் கார்டு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், வீட்டில் இருந்துக்கொண்டே ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வீட்டில் இருந்தே சுலபமாக ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.. எப்படி தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Updated On: 

08 Mar 2026 14:47 PM

 IST

தற்போது பெரும்பாலான பொதுமக்கள் கையில் பணத்தை வைத்து செலவு செய்யவில்லை என்றாலும், பணத்தின் தேவை பல இடங்களில் உள்ளது. முன்பெல்லாம் பணத்தை எடுக்க வங்கிக்கு செல்ல வேண்டும். ஆனால், தற்போது அப்படி அல்லது. குறிப்பிட்ட இடைவெளிகளில் ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் மிக சுலபமாகவே தேவைப்படும் நேரங்களில் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். அவ்வாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு மிக முக்கியமானதாக உள்ளது. இந்த நிலையில், வீட்டில் இருந்துக்கொண்டே ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வீட்டில் இருந்தே ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் – எப்படி?

உங்கள் கையில் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் இருந்தால் போதும் வீட்டில் இருந்துக்கொண்டே ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

  1. நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களோ அவற்றின் மொபைல் செயலி அல்லது இணையதளத்திற்கு செல்லுங்கள்.
  2. அதில் உங்களது வங்கி கணக்கு விவரங்கள், ஓடிபி உள்ளிட்டவற்றை பதிவிட்டு லாக் இன் செய்துக்கொள்ளுங்கள்.
  3. பிறகு அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் சேவைகள் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
  4. அதில் உள்ள சேவைகளில் ஏடிஎம் கார்டு விண்ணப்பம் செய்வதற்கான ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
  5. பிறகு அதில் கேட்கப்படும் விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க : இரவோடு இரவாக நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விலை கடும் உயர்வு

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றி ஏடிஎம் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் குறைந்தது 15 நாட்களுக்குள்ளாக உங்களது வீட்டின் முகவரிக்கே ஏடிஎம் கார்டு வந்துவிடும்.

வீட்டில் இருந்தே எளிதாக சேவைகளை பெறலாம்

முன்பெல்லாம் வங்கிகளுக்கு சென்று பெற்ற சேவைகளை தற்போது வீட்டில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம். தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் வங்கிகள் அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலம் வழங்கி வருகின்றன. குறிப்பாக வங்கிகள் குறிப்பிட்ட கால நேரம் மட்டுமே செயல்படும் நிலையில், வங்கிகளின் செயலிகள் மற்றும் இணையதளங்கள் மூலம் விண்ணப்பம் செய்யும் பட்சத்தில் மிக எளிதாக செய்து முடித்துவிட முடியும்.

இதையும் படிங்க : EPS Vs PPF Vs NPS .. மூன்றில் ஓய்வு காலத்திற்கான சிறந்த முதலீடு எது?

வங்கி சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெறுவதற்கு செயலிகள் மற்றும் இணையதளங்கள் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
ஹார்முஸ் கடல் வழியை மூடுவதாக ஈரான் அறிவிப்பு - பரபரப்பு தகவல்
இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் நீரில் மூழ்கிய ஈரானின் போர் கப்பல் - 87 பேர் பலி
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் - பெட்ரோல், டீல் விலை அதிகரிக்குமா?
குவைத் துறைமுகத்தில் எண்ணெய் டேங்கர் அருகில் வெடிப்பு