ஏன் ஆதார் இந்திய குடியுரிமைக்கான சான்று இல்லை? காரணம் என்ன?

Aadhaar Clarification by UIDAI: இந்தியாவில் ஒருவரின் பொதுவான அடையாள ஆவணமாக ஆதார் விளங்குகிறது. ஆனால் ஆதார் கார்டு ஒருவரின் குடியுரிமைக்கான சான்றாக இருக்காது என இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார். அது குறித்து விளக்கமாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஏன் ஆதார் இந்திய குடியுரிமைக்கான சான்று இல்லை? காரணம் என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

09 Sep 2025 14:53 PM

 IST

இந்தியர்களுக்கான பொதுவான அடையாள ஆவணம்  என்ற முறையில் வழங்கப்படும் ஆதார் (Aadhaar) கார்டு குடியுரிமைக்கான சான்றாகாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) தலைவர் புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார். பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை பெயர், முகவரி, புகைப்படம் போன்ற தகவல்களை மட்டுமே கொண்டிருக்கும். ஆனால் அதனை வைத்து அடையாளம் காண முடியாது. ஒருவரின் 10 விரல் ரேகைகள், முக அடையாளம் என 13 பயோமெட்ரிக் அம்சங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதனை  மற்ற அடையாள ஆவணங்களுடன் ஒப்பிட்டு ஒவ்வொரு ஆதாரும் தனித்துவமாக இருப்பதை உறுதி செய்கிறது.

ஆதார் குடியுரிமைக்கான சான்று இல்லையா?

ஆதார் சட்டத்திலேயே அது குடியுரிமைக்கான சான்று அல்ல என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. காரணம் இந்தியர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டு குடிமக்களுக்கும் ஆதார் கிடைக்கும். இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்தால் வெளிநாட்டினரும் ஆதார் பெறலாம். குறிப்பாக நேபாளம், பூட்டான் நாட்டினரும் ஆதார் பெற முடியும். இதனால் ஆதார் குடியுரிமைக்கான சான்று இல்லை. அது வெறும் வசிப்பிட அடையாளத்துக்கான சான்று மட்டுமே.

இதையும் படிக்க : அனைத்து ஆதார் சேவைகளும் ஒரே செயலியில்.. அசத்தல் அம்சங்களுடன் விரைவி வருது இ ஆதார் செயலி!

இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் புவனேஷ் குமார் தெரிவித்ததாவது, ஒருவரை வேறு ஒருவரை போல நடிக்க முயன்றாலும், உடனே அவர் மாட்டிக்கொள்வார். காரணம், ஆதாரில் ஒருவரின் அனைத்து தகவல்களும் அடங்கியிருக்கும். அது தான் ஆதாரின் தனித்துவம். ஆதாரை எப்போதும் ஆஃப்லைன் வெரிஃபிகேஷன் மூலம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெறும் ஆதார் எண் மட்டும் சொன்னால் அதற்கு அர்த்தமாக இருக்காது என்றார்.

கியூஆர் கோட் மூலம் சரிபார்ப்பு

ஆதார் அட்டையில் உள்ள கியூஆர் கோட் மூலம் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் டிஜிட்டல் கையெழுத்துடன் இருக்கும். இதனை கியூஆர் செயலியில் ஸ்கேன் செய்தால், இணையம் இல்லாத இடத்திலும் ஆதார் உண்மையானதா என சரிபார்க்க முடியும். குறிப்பாக அதில் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், புகைப்படம் போன்றவை இருக்கும்.

இதற்கிடையில் பீஹாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஆதாரையும் அடையாள ஆவணமாக ஏற்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜோய்மால்யா பக்ஜி அமர்வு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவோ, அல்லது நீக்கவோ ஆதாரையும் 12வது ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் தேவைக்கேற்ப கூடுதல் ஆவணங்கள் மூலம் சரிபார்க்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது.

இதையும் படிக்க : உங்கள் பிஎஃப் கணக்கில் வட்டி நிறுத்தப்பட்டுள்ளதா? காரணம் இதுதான்!

இதனால் ஆதார் அட்டை ஒருவரின் தனித்துவமான அடையாளத்தை உறுதி செய்யும் அடையாள அட்டை என்றாலும், அது குடியுரிமை சான்றாக கருதப்படாது என்பது மீண்டும் தெளிவாகியுள்ளது.