ரீச்சார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தும் நிறுவனங்கள்.. பயனர்கள் அதிர்ச்சி!
Recharge Plans Price Will Be Hike | இந்தியாவில் உள்ள மிக முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் ஆகியவை தங்களின் ரீச்சார்ஜ் திட்டங்களுக்கான கட்டணங்களை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025, டிசம்பர் முதலே இந்த நிறுவனங்கள் கட்டங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாதிரி புகைப்படம்
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் தொலைத்தொடர்பு (Telecommunication) நிறுவனங்களாக ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) ஆகியவை உள்ளன. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் அந்த நிறுவனங்களின் தொலைத்தொடர்பு சேவைகளை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஆகிய முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மாதாந்திர சேவை கட்டணம் பல மடங்கு உயர உள்ளது. இந்த நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் கட்டணங்களை உயர்த்த உள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விரைவில் கட்டணங்களை உயர்த்த உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் ஆகியவை தங்களது ரீச்சார்ஜ் கட்டணங்களை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, டிசம்பர் , 2025 முதலே இந்த நிறுவனங்கள் தங்களது ரீச்சார்ஜ் கட்டணங்களை உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தற்போது இந்தியா முழுவதும் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. இதன் காரணமாக செலவுகள் அதிகரித்திருப்பதால் கட்டணங்களை உயர்த்த இந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இதையும் படிங்க : Gold Loan : தங்க நகை கடன்.. குறைந்த வட்டி வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!
எவ்வளவு கட்டணம் உயர்த்தப்பட உள்ளது?
ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தங்களின் ரீச்சார்ஜ் திட்டங்களின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அடிப்படை திட்டங்களின் விலையை 10 சதவீதம் உயர்த்தவும், மற்ற திட்டங்களுக்கான விலையை 20 சதவீதம் உயர்த்தவும் அந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரீச்சார்ஜ் திட்டங்களின் விலை மேலும் உயர உள்ளது பொதுமக்கள் மத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : EPFO : இபிஎஃப்ஓவில் Date of Exit தேதியை அப்டேட் செய்வது எப்படி?.. முழு விவரம் இதோ!
2024-ல் கட்டணத்தை உயர்த்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டும் தங்களது ரீச்சார்ஜ் திட்டங்களுக்கான கட்டணத்தை உயர்த்தின. கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டதன் காரணமாக ஏராளமான பயனர்கள் அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்-க்கு மாறினர். இந்த நிலையில், தற்போது ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த உள்ளது மேலும் பல பயனர்களை பிஎஸ்என்எல் படையெடுக்க செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.