ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த ஆர்பிஐ.. யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்?
Repo Rate Cut By 25 BPS | 2025 பிப்ரவரி மாதம் முதலே இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து வருகிறது. இந்த நிலையில், தற்போது நாணய கொள்கை குழு கூட்டத்திற்கு பிறகு 25 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது.

மாதிரி புகைப்படம்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) ரெப்போ வட்டி (Repo Rate) விகிதத்தை மீண்டும் ஒருமுறை குறைத்துள்ளது. ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை குறைத்த நிலையில், 5.50 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது 5.25 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக பல சாதகங்களும், சில பாதங்களும் உள்ளன. இந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது யாருக்கு சாதமானதாக உள்ளது, யாருக்கு பாதகமாக உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கி 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே ரெப்போ வட்டி விகிதத்தை அதிரடியாக குறைத்து வருகிறது. அதாவது 6.50 ஆக ரெப்போ வட்டி விகிதத்தை தற்போது வெறும் 5.25 சதவீதமாக வைத்துள்ளது. முன்னதாக ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதமாக இருந்த நிலையில், நாணய கொள்கை குழு கூட்டத்திற்கு பிறகு நேற்று (டிசம்பர் 05, 2025) மீண்டும் ரெப்போ வட்டி விகிதத்தில் 25 புள்ளிகளை குறைத்துள்ளது. இதன் காரணமாக தற்போது ரெப்போ வட்டி விகிதம் வெறும் 5.25 சதவீதமாக உள்ளது.
இதையும் படிங்க : பணி ஓய்வுக்கு முன்பு ரூ.1 கோடி வேண்டுமா?.. அப்போ இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!
ரெப்போ வட்டி குறைந்தது – யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்?
இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு முறை ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும்போதும் வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யும். அதாவது, ரெப்போ வட்டி குறைக்கப்படும் பட்சத்தில் கடன்களுக்கான வட்டி விகிதங்களும் குறைக்கப்படும். ஏற்கனவே கடன் வாங்கியவர்களுக்கும் இதன் மூலம் பலன் கிடைக்கும். அதாவது Floating Rate முறையில் கடன் பெற்று இருக்கும் நபர்கள், இவ்வாறு ரெப்போ வட்டி குறைக்கப்படும் பட்சத்தில் அவர்களது கடனுக்கான வட்டியும் குறையும்.
இதையும் படிங்க : தனிநபர் கடன்கள்.. இந்தியாவின் டாப் 5 வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் இவை தான்!
ரெப்போ வட்டி குறைவால் யாருக்கு பாதகம்?
வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன் என மாத தவணை செலுத்தும் அனைவருக்கும் ரெப்போ வட்டி விகித குறைவு ஒரு வரப்பிரசாதமான தான் இருக்கும். ஆனால், நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit) திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இது அவ்வளவு மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்காது. காரணம் ரெப்போ வட்டி குறைக்கப்படும் பட்சத்தில் வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டியையும் குறைக்கும். இதனால் குறைந்த அளவிலான லாபத்தை மட்டுமே முதலீட்டாளர்கள் பெற முடியும்.