Repo Rate : வீட்டு கடன் வைத்துள்ளவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ வட்டி விகிதம் குறித்து வெளியான முக்கிய தகவல்!
RBI May Cut Repo Rate | இந்திய ரிசர்வ் வங்கி 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் மூன்று முறை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. அதாவது ஜனவரி மாதம் தொடங்கி ஜுலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் மூன்று முறை குறைத்துள்ளது. அதன்படி, 6.50 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது 5.50 சதவீதமாக உள்ளது.

மாதிரி புகைப்படம்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) கடந்த சில மாதங்களில் மட்டும் மூன்று முறை ரெப்போ வட்டி விகிதத்தை (Repo Interest Rate) குறைத்து அறிவித்த நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்குள்ளாக ஆர்பிஐ மீண்டும் ரெப்போ வட்டியை குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆர்பிஐ ரெப்போ வட்டியை குறைத்த நிலையில், பல வங்கிகள் தங்களது கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. இந்த நிலையில், மேலும் ஒருமுறை ஆர்பிஐ ரெப்போ வட்டியை குறைக்கும் பட்சத்தில் வீடு மற்றும் சிறு வணிக கடன்களுக்கான வட்டி குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ரெப்போ வட்டி விகிதத்தை மூன்றாவது முறையாக குறைத்த ஆர்பிஐ
கடந்த 5 ஆண்டுகளாக ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்காமல் இருந்த இந்திய ரிசர்வ் வங்கி 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் மூன்றாவது முறை ரெப்போ வட்டியை குறைத்துள்ளது. அதன்படி, 6.50 ஆக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது வெறும் 5.50 சதவீதமாக உள்ளது. அதாவது வெறும் 6 மாதத்தில் மட்டும் ரெப்போ வட்டியில் ஆர்பிஐ 1 சதவீதம் குறைத்துள்ளது.
ஆர்பிஐ வங்கிகளுக்கு கடன் வழங்கும் நிலையில், ஆர்பிஐ ரெப்போ வட்டியை குறைத்தாலோ அல்லது உயர்த்தினாலோ அது வட்டி விகிதத்தில் எதிரொலிக்கும். இந்த நிலையில், ஆர்பிஐ 6.50 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டியை 5.50 சதவீதமாக குறைத்துள்ள நிலையில், வங்கிகளில் அது எதிரொலிக்க தொடங்கியுள்ளது. அதாவது வங்கிகள் ரெப்போ வட்டியை குறைக்க தொடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
மீண்டும் ரெப்போ வட்டியை குறைக்கும் ஆர்பிஐ?
ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை மூன்று முறை குறைத்த நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்குள்ளாக மீண்டும் ரெப்போ வட்டி குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் வீட்டு கடன்கள் மற்றும் சிறு வணிக கடன்களுக்கான வட்டி குறைவாதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தும் சில வங்கிகள் கடன்களுக்கான வட்டியை குறைக்காமல் உள்ளன. இந்த நிலையில், பொதுமக்கள் தங்களது வங்கிகளை தொடர்ப்புக்கொண்டு இது குறித்து வட்டி குறைப்பை பெற வேண்டும்.
பொதுமக்கள் தாங்கள் வாங்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு அல்லது மாத தவணைகளை குறைத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.