கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்த மேலும் 3 நாட்கள் அவகாசம் – ஆர்பிஐயின் புதிய விதி – யாருக்கு நன்மை?
Credit Card Rule Change : இந்திய ரிசர்வ் வங்கிகளின் புதிய விதிகளின் படி, கிரெடிட் கார்டு கட்டணத்தை பணம் செலுத்த தவறினால் உடனடியாக அபராதம் விதிக்கப்படாது. மேலும் 3 நாட்களுக்கு பிறகு மட்டுமே நடைமுறைக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்திய ரிசர்வ் வங்கி கிரெடிட் கார்டு விதிகளில் முக்கிய தளர்வை அறிவித்துள்ளது. புதிய விதிகளின்படி , வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்த தவறினால், அவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்காமல், 3 நாட்கள் வரை ஒரு கால அவகாசம் வழங்கும் வகையில் மாற்றத்தை அறிவித்துள்ளது. இந்த மாற்றம் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழிகாட்டுதல்கள் 2026 என்ற புதிய வழிகாட்டுதல்களின் படி வாடிக்கையாளர்களுக்கு தளர்வை வழங்குகிறது. இது மாத சம்பளம் வாங்குபவர்கள், அவர்கள் அலுவலகத்தில் சம்பளம் வழங்க தாமதப்படுத்தினால் அவர்களால் உரிய நேரத்தில் கிரெடிட் கார்டு கட்டணத்தை செலுத்த முடியாமல் போகலாம். இந்த நிலையில் இந்த புதிய திருத்தம் அவர்களுக்கு பெரிதும் கை கொடுக்கும்.
புதிய விதிகள் சொல்வது என்ன?
புதிய விதிகளின் படி, கிரெடிட் கார்டு கட்டத்தை சரியான நேரத்தில் செலுத்த தவறினால், அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படாது. அவருக்கு 3 நாட்கள் அவகாசம் வழஹ்கப்படும். 3 நாட்களுக்கு பிறகும் அவர் செலுத்த தவறினால் மட்டுமே, அவர் பணம் செலுத்த தாமதப்படுத்தியதாக கூறி, 3 நாட்களுக்கு பிறகு அபராதம் விதிக்க தொடங்கப்படும்.
இதையும் படிக்க : ஆன்லைன் பரிவர்த்தனையின்போது ரூ.1 எடுக்கப்படுவது ஏன்? பாதுகாப்பானதா?
அதாவது நாம் கிரெடிட் கார்டு கட்டணத்தை பணம் செலுத்த தவறினால் உடனடியாக அபராதம் விதிக்கப்படாது. மேலும் 3 நாட்களுக்கு பிறகு மட்டுமே நடைமுறைக்கு வரும். மேலும் முன்பு அபராத கணக்கீட்டிலும் முக்கிய மாற்றம் நடைமுறைக்கு வரவிருக்கிறது. முன்பு முழு பில் தொகையில் பில் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது பணம் செலுத்த வேண்டிய நாட்களுக்கு பிறகு அவர் செலுத்த வேண்டிய தொகைக்கு மட்டும் அபராதம் விதிக்கப்படுகிறது. இது நியாயமான மற்றும் சமமான கட்டண முறையை உருவாக்கும்.
ஆனாலும் இதில் வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது, பணம் செலுத்த வேண்டிய நாள் முதல் தாமதம் கணக்கில் கொள்ளப்படும். அதாவது கட்டணம் செலுத்த வேண்டிய நாளுக்கு பிறகு 3 நாட்களுக்குள் பணம் செலுத்தினால் அபராதம் விதிக்கப்படாது. ஆனால் 3 நாட்களுக்கு பிறகும் தாமதப்படுத்தினால், அந்த 3 நாட்கள் கால அவகாசத்திற்கும் சேர்த்து கட்டணம் செலுத்த வேண்டும்.
இதையும் படிக்க : இந்திய ரூபாய் நோட்டுகளில் இருக்கும் கோடுகளுக்கு அர்த்தம் என்ன?
வாடிக்கையாளர்களுக்கு நியாயமான கட்டண முறையை உருவாக்கவும், வங்கிகளில் பின்பற்றும் விதிகளில் ஒற்றுமையை உருவாக்கவும் இந்த விதி அமல்படுத்தப்படுகிறது. இந்த புதிய விதி வருகிற ஏப்ரல் 1, 2027 முதல் அமலுக்கு வரவிருக்கிறது. அதற்குள் வங்கிகள் மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு ஏற்ப விதிகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.