PM Kisan : பிஎம் கிசான் பணம் பெற e KYC கட்டாயம்.. ஆன்லைன் மூலம் சுலபமாக முடிச்சிடலாம்!
PM Kisan 20th Installment | பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 19 தவணைகள் பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், 20வது தவணை பணம் எப்போது வரவு வைக்கப்படும் என விவசாயிகள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

மாதிரி புகைப்படம்
பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா (PM Kisan Samma Nidhi Yojana) திட்டத்தின் 19வது தவணையை மத்திய அரசு (Central Government) விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைத்துள்ள நிலையில், 20வது தவணை பணம் எப்போது வரும் என விவசாயிகள் காத்திருந்தனர். இந்த நிலையில், 20வது தவணை பிஎம் கிசான் பணம் ஜூலை 2025-க்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆனால், அதில் ஒரு சிக்கல் உள்ளது. பிஎம் கிசான் 20வது தவணை பெற வேண்டும் என்றால் கட்டாயம் e KYC செய்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிஎம் கிசான் சம்மன் நிதி பெற e KYC செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிஎம் கிசான் – விவசாயிகளின் வங்கி கணக்கில் 19வது தவணை பணம் செலுத்திய அரசு
பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் விவசாயிகளுக்காக மத்திய அரசு கொண்டு வந்த ஒரு சிறந்த திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் அரசு விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கிவருகிறது. அதன்படி, பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ள விவசாயிகள் இந்த திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 பணம் வழங்கப்படுகிறது. இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 4 மாதங்களுக்கு ஒருமுறை பிரித்து வழங்கப்படுகிறது. அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை 4 மாத இடைவெளியில் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிஎம் கிசான் 19வது தவணை பிப்ரவரி 2025-ல் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிலையில், ஜூன் 2025-ல் 20வது தவணை வரவு வைக்கப்படும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ரூ.5 லட்சம் முதலீட்டுக்கு வட்டி மட்டுமே ரூ.10 லட்சம்.. 3 மடங்கு லாபம் தரும் சூப்பர் திட்டம்!
பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா – e KYC செய்வது எப்படி?
- முதலில் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் அதிகாரப்பூர்வ https://pmkisan.gov.in/இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் கொடுக்கப்பட்டுள்ள கிசான் கார்னர் என்பதை கிளிக் செய்து பிறகு e KYC விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- அங்கு ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை பதிவிட வேண்டும்.
- அதனை தொடர்ந்து மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும்.
- அதனை பயன்படுத்தி e KYC-யை முடித்துவிடலாம்.
மேற்கண்ட இந்த நடைமுறையை பின்பற்றி மிக எளிதாக பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் e KYC முடித்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.