PAN Card : உங்கள் பான் கார்டை வேறு யாரேனும் பயன்படுத்துகின்றனரா?.. கண்டுபிடிப்பது எப்படி?
PAN Card Fraud Detection | இந்தியாவில் குடிமக்களுக்கு கட்டாயமாக உள்ள ஆவணங்களில் பான் கார்டும் ஒன்று. பான் கார்டு இல்லை என்றால் சில முக்கியமான வேலைகளை செய்ய முடியாத சூழல் உள்ளது. இந்த நிலையில், இத்தகைய முக்கியமான ஆவணமான பான் கார்டு விவரங்கள் திருடப்பட்டு அதன் மூலம் மோசடி நடைபெற வாய்ப்புள்ளது.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் வசிக்கும் குடிமக்களுக்கு தேவையான மிக முக்கிய ஆவண்ங்களில் ஒன்றுதான் பான் கார்டு (PAN Card). இந்திய குடிமக்களுக்கு எப்படி ஆதார் கார்டு (Aadhaar Card) கட்டாயமாக உள்ளதோ அதேபோல 18 வயதை நிரம்பிய, வங்கி கணக்கு மற்றும் சேவைகளை பயன்படுத்தும் அனைவருக்கும் ஆதார் கட்டாயமாக உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பான் கார்டு இல்லை என்றால் பல வேலைகளை செய்ய முடியாத சூழல் தான் உள்ளது. பான் கார்டு இவ்வளவு முக்கிய ஆவணமாக உள்ள நிலையில், அது தவறாக பயபன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், உங்களின் கவனம் இல்லாமல் உங்கள் பான் கார்டு யாராலாவது பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துக்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மிக முக்கிய ஆவணமாக விளங்கும் பான் கார்டு
இந்திய குடிமக்களுக்கு ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட சில ஆவணங்கள் கட்டாயமாக உள்ளன. அத்தகைய கட்டாய ஆவணங்களில் ஒன்றுதான் இந்த பான் கார்டு. பான் கார்டில் மொத்தம் 10 எண்கள் இருக்கும். இதில் எண்கள் மட்டுமன்றி எழுத்துகளும் இருக்கும். ஒருவர் எத்தனை வங்கி கணக்குகள் வைத்திருந்தாலும் அவை அனைத்தும் இந்த ஒரே பான் கார்டின் கீழ் கொண்டுவரப்படும். அதன் மூலம் ஒருவர் ஒரு மாதத்தில் எவ்வளவு வருமானம் பெறுகிறார், ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் பெறுகிறார், எவ்வளவு செலவு செய்கிறார், அவரின் பெயரில் எவ்வளவு கடன் உள்ளது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கண்டறிய முடியும். அதுமட்டுமன்றி, ஒருவர் முறையாக வருமான வரி செலுத்துகிறாரா என்பதை கண்டறியவும் இந்த பான் கார்டு முக்கிய காரணியாக உள்ளது.
இதையும் படிங்க : இ-பான் என்றால் என்ன?.. இணையத்தில் விண்ணப்பிப்பது எப்படி?..சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
உங்கள் பான் கார்டை வேறு யாரேனும் பயன்படுத்துகின்றனரா?
பான் கார்டு விவரங்கள் திருடப்பட்டு அதன் மூலம் மோசடி சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், உங்கள் பான் கார்டை யாரேனும் மோசடிக்காக பயன்படுத்தி உள்ளார்களா என்பதை கீழ்கண்ட முறையை பின்பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.
கிரெடிட் அறிக்கையை சோதனை செய்வது
உங்களது கிரெடிட் அறிக்கையை (Credit Report) அவ்வப்போது சோதனை செய்வது, உங்களது பான் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய உதவும். அவ்வாறு கிரெடிட் அறிக்கைகளை சோதனை செய்யும்போது அதில் ஏதேனும் பரிட்சயம் இல்லாத கணக்குகள் இடம்பெற்றுள்ளதா என்பதை சோதனை செய்ய வேண்டும். அவ்வாறு சோதனை செய்யும் போது அதில் தவறான கணக்கு எண்கள் அல்லது விண்ணப்பிக்காத கடன்கள் இருந்தால் உங்கள் கிரெடிட் கார்டு மூலம் மோசடி நடைபெற்றிருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம் ஆகும்.
ஆரம்பத்திலே கண்டுபிடிப்பது எப்படி?
உங்கள் கிரெடிட் அறிக்கையை 3 மாதங்கள் அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது சோதனை செய்ய வேண்டும். அதுவும் இல்லையென்றால் ஆண்டுக்கு ஒருமுறையாவது அதனை சோதனை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகளை முன்கூட்டியே கண்டுபிடித்து மோசடிகளை தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.