கேஸ் சிலிண்டர் விநியோக மோசடி.. கவனமாக இருங்கள்.. பொதுமக்களை எச்சரிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்!

Oil Companies Asked Customer To Beware | மேற்கு ஆசியா போர் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் ஓடிபி முறை அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், அந்த ஓடிபி மூலம் புதிய வகை மோசடி ஒன்று அரங்கேறி வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

கேஸ் சிலிண்டர் விநியோக மோசடி.. கவனமாக இருங்கள்.. பொதுமக்களை எச்சரிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

11 May 2026 17:03 PM

 IST

மேற்கு ஆசிய போர் (West Asia War) காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை (Crude Oil Price) உச்சத்தில் உள்ளது. இதன் காரணமாக உலக நாடுகள் பெட்ரோல், டீசல் விலை, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட சிக்கல்களை எதிர்க்கொண்டு வருகின்றன. இதன் காரணமாக சில உலக நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் முன்பதிவில் மாற்றங்கள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய நடைமுறைகள் அமலில் உள்ள நிலையில், கேஸ் சிலிண்டர்கள் குறித்து எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளன. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கேஸ் சிலிண்டர் விநியோக்கத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள்

மேற்கு ஆசிய போர் பதற்றம் காரணமாக கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்படும் என்ற பதற்றத்தில் பொதுமக்கள், நிறுவனங்கள், உணவனங்கள் என கூடுதலாக கேஸ் சிலிண்டர்களை வாங்கி பதுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தான், கேஸ் சிலிண்டர் முன்பதிவு குறித்து சில முக்கிய விதிகளை அரசு அறிமுகம் செய்தது. அதாவது கிராமப்புரங்களில் 45 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், நகரத்தில் உள்ளவர்கள் 25 நாட்களுக்கு பிறகே கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டும் என முக்கிய விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

இதையும் படிங்க : இனி ரூ.1 லட்சம் லிமிட் இல்லை.. UPI-ல் மாறிய ரூல்ஸ்.. புதிய விதிகள் கூறுவது என்ன?

ஓடிபி மூலம் நடைபெறும் மோசடி – எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை

கேஸ் சிலிண்டர்கள் முறையாக விநியோகம் செய்யப்படும் வேண்டும் என்பதற்காக ஓடிபி முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் ஊழியரிடம் பயனர்கள் தங்களது மொபைல் எண்ணுக்கு வந்த ஓடிபியை உள்ளிட்டால் மட்டுமே கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என கூறப்பட்டு அந்த முறை தற்போது அமலில் உள்ளது. இந்த நிலையில், இந்த ஓடிபி முறையை பயன்படுத்தி புதிய மோசடி ஒன்று உருவெடுத்துள்ளது.

இதையும் படிங்க : மே 15-க்குள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு?.. வெளியான முக்கிய தகவல்!

இது தொடர்பாக கூறியுள்ள ஹெச்பி நிறுவனம், VM-HPGASc-S என்று வரக்கூடிய ஓடிபி தான் நாங்கள் உண்மையாக அனுப்பக்கூடிய ஓடிபி. இது தவிர வேறு பெயரில் உங்களுக்கு ஓடிபி வருகிறது அல்லது உங்களை யாரேனும் மொபைல் போனில் தொடர்ப்புக்கொண்டு கேஸ் டெலிவரிக்காக என ஓடிபி கேட்டால் கவனமாக இருங்கள். அது மோசடிக்காரர்கள் உங்களுக்கு விரிக்கும் வலை. அதற்கு இரையாகும் பட்சத்தில் உங்களது பணம் கொள்ளை அடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி