புதிய கேஸ் இணைப்பு வழங்குவது நிறுத்தம்.. பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்!
New Gas Cylinder Connection Stopped | மேற்கு ஆசியா போர் காரணமாக இந்தியா கடந்த சில நாட்களாக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில், புதிய கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்குவதை நிறுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஏப்ரல் 28 : மத்திய அரசின் (Central Government Of India) உத்தரவை அடுத்து வீடுகளுக்கு புதிய எல்பிஜி கேஸ் சிலிண்டர் (LPG Gas Cylinder) இணைப்பு வழங்குவதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. ஈரான் போர் காரணமாக இந்தியாவில் மிக கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கேஸ் சிலிண்டர்கள் தொடர்பான முக்கிய சில விதிகள் அமலுக்கு வந்தன. இந்த நிலையில், தற்போது அரசின் அறிவுரையின்படி எண்ணெய் நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஈரான் போரால் இந்தியாவில் ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு
மேற்கு ஆசிய போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு வரும் எண்ணெய் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக இந்தியாவில் மிக கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில், குடியிருப்புகளுக்கு கேஸ் சிலிண்டர்கள் வழங்குவதில் முன்னுரிமை அளித்த மத்திய அரசு, வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்வதை நிறுத்தியது.
இதையும் படிங்க : அதிக கடன் சுமையில் இருக்கிறீர்களா?.. ரீ பைனான்சிங் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!
அதுமட்டுமன்றி கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான கால அளவில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. அதாவது, நகர்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் 25 நாட்களுக்கு ஒருமுறை கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என்றும், கிராமப்புரங்களில் வசிக்கும் நபர்கள் 45 நாட்களுக்கு ஒருமுறை கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போது வரை இந்த முறை தான் அமலில் உள்ளது.
புதிய கேஸ் இணைப்பு வழங்குவது நிறுத்தம்
இந்த நிலையில், கேஸ் சிலிண்டர்களை வாங்க ஏற்கனவே கேஸ் சிலிண்டர்களை வைத்திருக்கும் நபர்கள் வேறு சிலரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி கேஸ் இணைப்பு பெற்று வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் தான், புதிய கேஸ் இணைப்புகளை வழங்க வேண்டாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சக அதிகாரி கூறியதாவது, தொடர்ந்து புகார்கள் எழுந்ததன் காரணமாக தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சிலிண்டர் சிக்கல்கள் சீரடைந்ததும் புதிய இணைப்புகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.