நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்வு.. ஒரு லிட்டருக்கு இவ்வளவா?

Nayara Energy hikes petrol, diesel prices: தனியார் பெட்ரோல் பங்குகளில் விலை அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் பொதுத்துறை பெட்ரோல் நிலையங்களை நோக்கி அதிகளவில் செல்கின்றனர். இதனால் வரும் நாட்களில் அங்கு தட்டுப்பாடு ஏற்படவோ அல்லது நீண்ட வரிசைகள் உருவாகவோ வாய்ப்புள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்வு.. ஒரு லிட்டருக்கு இவ்வளவா?

கோப்புப் புகைப்படம்

Updated On: 

26 Mar 2026 12:56 PM

 IST

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனமான ‘நயாரா எனர்ஜி’ பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த அதிரடி மாற்றம் பொதுத்துறை பெட்ரோல் நிலையங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மாநிலங்களுக்கு வணிக சிலிண்டர் ஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்திய மத்திய அரசு.. ஹோட்டல், டீ கடைகளுக்கு குட் நியூஸ்!

புதிய விலை நிலவரம்:

கிடைத்த தகவல்களின்படி, நயாரா எனர்ஜி நிறுவனம் நாடு முழுவதும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5.30ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3ம் உயர்த்தியுள்ளது. அதன்படி, இந்த விலை உயர்வுக்குப் பிறகு, இன்று சென்னையில் நயாரா பெட்ரோல் பங்கில் ஒரு லிட்டர் பெட்ரோல் தோராயமாக ரூ.107.93க்கும், டீசல் ஒரு லிட்டர் தோராயமாக ரூ.97.22-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நயாரா எனர்ஜி நிறுவனம்:

நயாரா நிறுவனம் குஜராத்தின் வாதினாரில் (Vadinar) இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஒற்றை சுத்திகரிப்பு நிலையத்தை இயக்கி வருகிறது. இதன் ஆண்டு உற்பத்தித் திறன் 20 மில்லியன் டன் ஆகும். இந்தியா முழுவதும் இந்த நிறுவனத்திற்கு 6,500-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் உள்ளன.

கடந்த ஆண்டு, இந்த நிறுவனம் பெட்ரோகெமிக்கல் துறையிலும் கால்பதித்தது. இதற்காக 4,50,000 டன் உற்பத்தித் திறன் கொண்ட ‘பாலிப்ரோப்பிலீன்’ (Polypropylene) ஆலையை அமைத்துள்ளது குறிப்படத்தக்கது.

பொதுத்துறை நிறுவனங்களிலும் விலை உயருமா?

பொதுவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது, அதன் தாக்கம் தனியார் நிறுவனங்களில் உடனடியாகத் தெரியும். ஆனால், பொதுத்துறை நிறுவனங்கள் (IOCL, HPCL, BPCL) மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி செயல்படுவதால், விலையை உடனடியாக உயர்த்தாமல் தவிர்த்து வருகின்றன.

இருப்பினும், போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலருக்கும் மேல் சென்றால், பொதுத்துறை நிறுவனங்களும் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

கவலையில் வாகன ஓட்டிகள்:

சர்வதேச அளவில் நிலவும் அரசியல் சூழலால் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு, வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்துத் துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ள நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மாதம் ரூ.20,000 வருமானம்.. கடைசி காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழலாம்.. அசத்தல் திட்டம்!

தனியார் பெட்ரோல் பங்குகளில் விலை அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் பொதுத்துறை பெட்ரோல் நிலையங்களை நோக்கி அதிகளவில் செல்கின்றனர். இதனால் வரும் நாட்களில் அங்கு தட்டுப்பாடு ஏற்படவோ அல்லது நீண்ட வரிசைகள் உருவாகவோ வாய்ப்புள்ளது.

Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..