Cibil Score : சிபில் ஸ்கோர் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

Cibil Score Facts | இந்தியாவில் வங்கிகள் மூலம் தனிநபர் கடன், வீட்டு கடன் என எது வாங்க வேண்டும் என்றாலும் அதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், சிபில் ஸ்கோர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Cibil Score : சிபில் ஸ்கோர் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

25 Aug 2025 09:13 AM

வங்கிகளில் வீட்டு கடன் (Home Loan), வாகன கடன் (Vehicle Loan), தனிநபர் கடன் (Personal Loan) என எது வாங்க வேண்டும் என்றாலும் அதற்கு சிபில் ஸ்கோர் (Cibil Score) கட்டாயமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக போதுமான அளவு சிபில் ஸ்கோர் இல்லையென்றால் கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இந்த நிலையில், சிபில் ஸ்கோர் என்றால் என்ன, சிபில் ஸ்கோர் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது, சிலிப் ஸ்கோர் பாதிக்காமல் பாதுகாப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சிபில் ஸ்கோர் என்றால் என்ன?

சிபில் ஸ்கோர் என்பது ஒருவரின் கடன் வெளிப்படைத்தன்மையை உணர்த்தும் அளவுகோலாக உள்ளது. அதாவது பலரும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெறும் நிலையில், அதனை ஒருசிலர் மட்டுமே முறையாக திருப்பி செலுத்துவர். எனவே ஒருவர் தான் வாங்கிய கடனை எவ்வாறு முறையாக திருப்பி செலுத்துகிறார் என்பது பொருத்து இந்த சிபில் ஸ்கோர் இருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கடனை முறையாக திருப்பி செலுத்தும் நபர்களுக்கு அதிக சிபில் ஸ்கோரும், முறையாக திருப்பி செலுத்தாதவர்களின் சிபில் ஸ்கோர் குறைவாகவும் இருக்கும்.

இதையும் படிங்க : கிரெடிட் ஸ்கோர் இல்லாமல் கடன் வாங்குவதில் சிக்கலா? இந்த எளிய வழிகளை டிரை பண்ணுங்க!

சிபில் ஸ்கோரை கணக்கிடுவது யார்?

சிபில் ஸ்கோரை கணக்கிடுவது ஒரு தனியார் நிறுவனம் ஆகும். TransUnion CIBIL என்ற நிறுவனம் தான் இந்த சிபில் ஸ்கோரை நிர்வகிக்கிறது. இது தனியார் நிறுவனமாக இருந்தாலும், இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI – Reserve Bank of India) கண்காணிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் வங்கிகளில் இருந்து ஒவ்வொரு நபரின் கடன் மற்றும் பண பரிவர்த்தனை வரலாற்றை கணக்கிட்டு வழங்குகிறது. ஒவ்வொரு 30 நாட்களுக்கு ஒருமுறை இந்த சிபில் ஸ்கோர் வெளியிடப்படுகிறது.

இதையும் படிங்க : Credit Card : பழைய கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்ய போகிறீர்களா?.. அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!

சிபில் ஸ்கோரில் பிழை இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

பெரும்பாலும் சிபில் ஸ்கோரில் எந்த வித சிக்கலும் ஏற்படாது. ஆனால், ஒருசிலர் முறையாக மாத தவணைகள் மற்றும் கடனை திருப்பி செலுத்தினாலும், அவர்களுக்கு சிபில் ஸ்கோர் குறைவாகவே இருக்கும். இந்த நிலையில், அது குறித்து நீங்கள் சிபில் இடம் புகார் அளிக்கலாம். நீங்கள் புகார் அளித்த 30 நாட்களுக்குள்ளாக அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.