வாடிக்கையாளர்கள் கவனத்துக்க… மே மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை

Bank Holiday : ஏப்ரல் மாதம் முடிய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலின் படி மே மாத்தில் உள்ள 31 நாட்களில் 12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாடிக்கையாளர்கள் கவனத்துக்க... மே மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை

மாதிரி புகைப்படம்

Published: 

29 Apr 2026 11:45 AM

 IST

ஏப்ரல் மாதம் முடிய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் மே மாதத்தில் வங்கிகள் விடுமுறைகள் குறித்து தெரிந்துகொள்ளலாம். இது வாடிக்கையாளர்கள் பல்வேறு பணிகளுக்காக வங்கிக்கு செல்வதை முன்பே திட்டமிட உதவும். இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலின் படி மே மாத்தில் உள்ள 31 நாட்களில் 12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகள் , 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள் பல தேசிய மற்றும் மாநில பண்டிகைகள் அங்கும். இதனை தெரிந்து கொள்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் கடைசி நேர சிரமத்தை தவிர்க்கலாம். விடுமுறைகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

உழைப்பாளர் தினத்தை முன்னி்டு மே 1, 2026 அன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மே மாதம் மகாராஷ்டிரா தினம் மற்றும் புத்த பூர்ணிமா உள்ளிட்ட காரணங்களாலும் நாட்டில் பல்வேறு பகுதிகளில் விடுமுறை விடப்பட்டிருக்கும். இது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். குறிப்பாக குஜராத், ஒடிசா, சண்டிகர், சிக்கிம், ராஜஸ்தான், நாகலாந்து மற்றும் மேகாலயா போன்ற சில மாநிலங்களில் இந்த நாளில் வங்கிகள் திறந்திருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : வைப்பு நிதி திட்டங்களில் முறையாக முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம்.. அதற்கு இவற்றில் கவனமாக இருக்க வேண்டும்!

வங்கிகளுக்கு மே மாத விடுமுறை

  • மே 1, 2026 – உழைப்பாளர் தினம்
  • மே 2, 2026 – ஞாயிற்றுக்கிழமை
  • மே 7, 2026 – புத்த பூர்ணிமா
  • மே 9, 2026 – 2வது சனிக்கிழமை
  • மே 10, 2026 – ஞாயிற்றுக்கிழமை
  • மே 17, 2026 – ஞாயிற்றுக்கிழமை
  • மே 23, 2026 – 4வது சனிக்கிழமை
  • மே 24, 2026 – ஞாயிற்றுக்கிழமை
  • மே 25, 2026 – மாகாராண பிரதாப் ஜெயந்தி
  • மே 31 , 2026 – ஞாயிற்றுக்கிழமை

இதில் உழைப்பாளர் தினம், 2வது மற்றும் 4வது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாட்கள் அந்தந்த மாநில விடுமுறையாக இருக்கும். இதனால் அந்தந்த மாநில வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படும்.  இதனால் விடுமுறைகளுக்கு ஏற்ப வங்கிககளுக்கு முன் கூட்டியே சென்று தங்கள் பணிகளை முடிக்கலாம். விடுமுறை தினங்களிலும் ஆன்லைன் சேவைகள் தொடர்ந்து கிடைக்கும் என்பதால், ஆன்லைனில் பணம் அனுப்புவது, பணம் பெறுவது ஏடிஎம் மூலம் பணம் எடுப்பது போன்ற ஆப்சன்களை தேர்வு செய்யலாம்.

இதையும் படிக்க : அதிக கடன் சுமையில் இருக்கிறீர்களா?.. ரீ பைனான்சிங் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!

பல வங்கிகள் ஆன்லைன் சேவைகளை வழங்குகின்றன. அவற்றை பெறுவதன் மூலம் அவசர தேவைகளின்போது இருந்த இடத்திலேயே பெரும்பாலான வங்கி சேவைகளை பெற முடியும். இதனால் நாம் வங்கிகளுக்கு தேவையில்லாமல் அலைவது குறையும். விடுமுறை நாட்களிலும் சிக்கல் இன்றி வங்கி சேவைகளை பெற முடியும். அவசர காலங்களில் இது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் முன் கூட்டியே அந்த சேவையை பெறுவது நன்மை பயக்கும்.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..