வாழ்க்கைக்கு பாரமாக மாறும் மாத தவணைகள்?.. இவற்றை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Monthly Installment Become Burden | தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் மாத தவணை முறையை பயன்படுத்தி பொருட்களை வாங்குகின்றனர். ஆனால் இவ்வாறு செய்வதன் மூலம் கூடுதல் நிதி சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, மாத தவணை வாங்குவதற்கு முன்னதாக இந்த சில விஷயங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

மாதிரி புகைப்படம்
தற்போதைய காலக்கட்டத்தில் மாத தவணைகள் (Monthly Installment) பொதுமக்களின் வாழ்க்கையுடன் ஒன்றாக கலந்துவிட்டது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகவே அது மாறிவிட்டது. அந்த அளவிற்கு பெரும்பாலான பொதுமக்கள் மாத தவணைகளை பயன்படுத்தி கடன் வாங்குவது, வீட்டு உபயோக பொருட்களை வாங்குவது, மின்சாதன பொருட்களை வாங்குவது உள்ளிட்ட செயல்களை செய்து வருகின்றனர். இந்த நிலையில், மாத தவணை முறை ஒரு தனி மனித பொருளாதாரத்தை எந்த அளவு பாதிக்கிறது, மாத தவணை முறையில் ஏதேனும் வாங்குவதற்கு முன்னதாக என்ன செய்ய வேண்டும், எவ்வாறு தயாராக வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மாத தவணை முறையில் உள்ள நன்மை, தீமைகள்
மாத தவணை முறையில் பொருட்களை வாங்குவது, கடன் வாங்குவதில் பல நன்மைகள் இருந்தாலும், அதில் சில தீமைகளும் உள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
நன்மைகள்
- மாத தவணை மூலம் அதிக விலை கொண்ட பொருட்களை முழு தொகையையும் செலுத்தாமல் எளிதாக வாங்க முடியும்.
- சரியான நேரத்தில் பணத்தை திருப்பி செலுத்துவதன் மூலம் கிரெடிட் ஸ்கோரை பாதுகாக்க முடியும்.
- வீடு, கார், கல்வி உள்ளிட்ட தேவைகளுக்கு மொத்தமாக வாங்கும் பணத்தை பகுதியாக செலுத்த வழிவகை செயப்படும்.
தீமைகள்
- தேவையற்ற மற்றும் அதிக விலை கொண்ட பொருட்களை வாங்க தூண்டும்.
- மாதம் தோறும் மாத தவணை செலுத்த வேண்டும் என்பது பிற நிதி தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் செய்துவிடும்.
- மாத தவணை முறையை, முறையாக பயன்படுத்தவில்லை என்றால் கடனில் இழுத்துச் சென்றுவிடும்.
வாழ்க்கைக்கு பாரமாக மாறும் மாத தவணைகள்?
பொருட்கள் மற்றும் கடன் மாத தவணை முறையில் கிடைக்கிறது என்பதால் பெரும்பாலான் பொதுமக்கள் தங்களுக்கு அத்தியாவசியம் இல்லாத பொருட்களை கூட மாத தவணை முறையில் வாங்குகின்றனர். இவ்வாறு செய்வது அவர்களின் நிதி மேலான்மையை மிக கடுமையாக பாதிக்க கூடும். காரணம், இந்தியாவை பொருத்தவரை பெரும்பாலான பொதுமக்கள் தங்களது வங்கி கணக்கிற்கு சம்பளம் வந்த அடுத்த ஒருசில நாட்களிலே அவற்றை மொத்தமாக மாத தவணைக்கு செலுத்திவிடுகின்றனர். இவ்வாறு செய்வது நிதியை இழக்க செய்யும்.
இதையும் படிங்க : லோனை முன்கூட்டியே அடைத்தால் கிரெடிட் ஸ்கோர் பாதிக்குமா? உண்மை என்ன?
மொத்தமாக தொகையை செலுத்தி ஒரு பொருளை வாங்க முடியாது என்பதாலும், மொத்தமாக கடனை அடைக்க முடியாது என்பதாலும் பொதுமக்கள் இந்த மாத தவணை முறையை தேர்வு செய்யும் நிலையில், நாளடைவில் அதையே அவர்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிடுகின்றனர். எனவே, மாத தவணை முறையில் கடனோ அல்லது பொருட்களோ வாங்குவதற்கு முன்னதாக மாத தவணையின் நன்மை, தீமைகள் குறித்து தெளிவாக யோசனை செய்து வாங்குவது சிறப்பானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.