BNPL மூலம் பொருட்களை வாங்குவது உண்மையில் பாதுகாப்பானது இல்லையா?.. பொருளாதார வல்லுநர்கள் கூறுவதை கேளுங்கள்!

Is BNPL Is Really Safe | தற்போது பெரும்பாலான மக்கள் Buy Now Pay Later அம்சத்தின் மூலம் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்கின்றனர். இந்த நிலையில், இந்த அம்சத்தில் உள்ள சில சிக்கல்கள் குறித்து பொருளாதார வல்லுநர்கள் சில முக்கிய விஷயங்களை கூறுகின்றனர்.

BNPL மூலம் பொருட்களை வாங்குவது உண்மையில் பாதுகாப்பானது இல்லையா?.. பொருளாதார வல்லுநர்கள் கூறுவதை கேளுங்கள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

08 Nov 2025 11:29 AM

 IST

முன்பெல்லாம் ஏதேனும் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் அதற்கான முழு தொகையையும் செலுத்தினால் மட்டுமே அதனை கடையில் இருந்து எடுத்து வர முடியும். ஆனால், தற்போது அதற்கெல்லாம் அவசியம் இல்லை. பொதுமக்களின் தேவைகளை அவர்கள் எளிதில் பூர்த்தி செய்துக்கொள்ள மாத தவணை முறை (EMI – Every Month Installment) உள்ளது. இதன் மூலம் எந்த ஒரு பொருளையும் முழு தொகையையும் கட்டி வாங்க முடியவில்லை என்றால் அதனை மாத தவணை மூலம் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

பெரும்பாலான பொதுமக்கள் இந்த முறையை தான் பின்பற்றுகின்றனர். கடைகள், ஷோரூம்களில் இந்த முறை அமலில் இருக்கும் நிலையில், தற்போது பல செயலிகள் இத்தகைய அம்சத்தை வழங்குகின்றன. BNPL (Buy Now Pay Later) என்ற அம்சம் தான் அது. அதாவது பொருளை வாங்கிக்கொண்டு அதற்கான பணத்தை பிறகு செலுத்தும் வசதி. இது பலருக்கும் ஒரு சிறந்த அம்சமாக தோன்றினாலும், இதில் சிக்கல் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

BNPL உண்மையில் பாதுகாப்பான அம்சம் இல்லையா?

Buy Now Pay Later அம்சம் பொருட்களை வாங்கும்போது உங்களுக்கு மிகவும் இனிமையானதாக இருக்கலாம். ஆனால், அதற்கான பில் வந்ததும் தான் உங்களுக்கு அதில் இருக்கும் சிக்கல் என்னவென தெரியும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இது குறித்து தனது லிங்கிடுஇன் (LinkedIn) பக்கத்தில் பதிவிட்டுள்ள பொருளாதார வல்லுநர்கள் ஒருவர், விழிப்புணர்வுக்காக ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : EPFO : இபிஎஃப்ஓவில் Date of Exit தேதியை அப்டேட் செய்வது எப்படி?.. முழு விவரம் இதோ!

பல மடங்கு உயர்ந்த கட்டணம்

தீபாவளி பண்டிகையின் போது ஒருவர் மொத்தம் ஐந்து Buy Now Pay Later செயலிகளில் இருந்து ரூ.85,000 மதிப்பிலான பொருட்களை வாங்கியுள்ளார். குறைந்த அளவிளான மாத தவணை, வட்டி இல்லை ஆகியவற்றால் அவர் அதனை சமாளித்துக்கொள்ளலாம் என நினைத்துள்ளார். ஆனால், அவர் நினைத்தபடி நடக்கவில்லை. அவர் ஒருமுறை மாத தவணையை தாமதமாக கட்டியதால் அவருக்கு ரூ.2,300 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. அது அவரின் கிரெடிட் ஸ்கோரில் (Credit Score) கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் அதற்காக போராடி வருகிறார் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம்.. மீண்டும் ரூ.90,000-க்கு விற்பனை!

0% வட்டி எப்போதும் உண்மை கிடையாது

பெரும்பாலான Buy Now Pay Later செயலிகள் மற்றும் இணையதளங்கள் 0% வட்டி என்ற அம்சத்தை வைத்துள்ளனர். ஆனால், அது அப்படி செயல்படாது. நீங்கள் உரிய நேரத்திற்குள்ளாக பணத்தை திருப்பி செலுத்தும்போது தான் இது சரியாக இருக்கும். ஒருவேளை நீங்கள் பணம் செலுத்த வேண்டிய தேதியை தாண்டிவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு பல மடங்கு வட்டி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.