இண்டேன் கேஸ் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. கேஸ் சிலிண்டர்களை தொடர்ந்து பெற இது கட்டாயம்!

Important Announcement For Indane Gas Cylinder Users | இண்டேன் கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு அந்த நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சில பணிகளை செய்யவில்லை என்றால் கேஸ் சிலிண்டர் தொடர்ந்து கிடைக்காது என அது கூறியுள்ளது.

இண்டேன் கேஸ் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. கேஸ் சிலிண்டர்களை தொடர்ந்து பெற இது கட்டாயம்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

27 Mar 2026 14:49 PM

 IST

ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதன் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் (Gas Cylinder) தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், கேஸ் சிலிண்டர்கள் முன்பதிவு செய்வது தொடர்பான விதிகளில் மத்திய அரசு மாற்றம் செய்தது. அதுமட்டுமன்றி, கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்யும் எண்ணெய் நிறுவனங்களும் சில முக்கிய விதி மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இண்டேன் கேஸ் (Indane Gas) பயன்படுத்தும் பொதுமக்களுக்கு அந்த நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, கேஸ் சிலிண்டர்களை தொடர்ந்து பெற சில வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர்கள் முன்பதிவு குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கேஸ் சிலிண்டர் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும்

அதாவது, வாடிக்கையாளர்கள் கேஸ் சிலிண்டர் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இண்டேன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. ஒருவேளை வாடிக்கையாளர்கள் தங்களது கேஸ் சிலிண்டர் இணைப்புடன் ஆதார் கார்டை இணைக்கவில்லை என்றால் சிலிண்டர் விநியோகத்தில் தடைகளையும், நேரடி பண பரிமாற்ற மாநியங்களை தொடர்ந்து பெறுவதில் சிக்கல்களையும் சந்திக்கலாம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதையும் படிங்க : Gold Price : அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. சரிவில் வெள்ளி.. இன்றைய நிலவரம்!

ஆன்லைன் மூலம் கேஸ் சிலிண்டர் கேஒய்சி செய்வது எப்படி?

கேஸ் சிலிண்டர் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் முறைதான் கேஒய்சி (KYC – Know Your Customer) என அழைக்கப்படுகிறது. இதனை ஆன்லைன் மூலமே மிக சுலபமாக செய்து முடித்துவிடலாம்.

  1. இந்தியன் ஆயில் ஒன் செயலியை திறந்து, அதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.
  2. முன்னதாக கேஸ் சிலிண்டர் வாங்கிய ரசீதில் உள்ள 16 இலக்க எல்பிஜி ஐடியை லிங்க் செய்ய வேண்டும்.
  3. அதற்கு முகப்பு பக்கத்தில் உள்ள மை ப்ரொஃபைல் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  4. அதில் LPG Details என்ற பகுதிக்கு சென்று பிறகு Indane Details என்ற பகுதிக்கு செல்ல வேண்டும்.
  5. பிறகு இகேஒய்சி விருப்பத்தை தேர்வு செய்து அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
  6. பிறகு ஃபேஸ் ஸ்கேன் ஆப்ஷனை கிளிக் செய்து பயோமெட்ரிக் சரிப்பார்ப்பை மேற்கொள்ள வேண்டும்.
  7. பின்னர் இகேஒய்சி கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க : குழாயில் வரும் கேஸ்.. எல்பிஜிக்கு மாற்றாகும் பிஎன்ஜி.. எப்படி கிடைக்கும்? அரசு சொல்வது என்ன?

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றி இகேஒய்சி மேற்கொள்ளும்போது 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள்ளாகவே இகேஒய்சி அப்டேட் ஆகிவிடும்.

Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..