இனி இவற்றுக்கெல்லாம் பான் கார்டு கட்டாயம்.. புதிய வருமான வரி விதிகள் பொதுமக்களுக்கு எவ்வாறு உதவும்?
Income Tax Department of India To Introduce New Set Of Rules | ஏற்கனவே வருமான வரித்துறையின் சில முக்கிய விதிகள் அமலில் உள்ள நிலையில், ஏப்ரல் 01, 2026 முதல் சில முக்கிய வரி மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.

மாதிரி புகைப்படம்
இந்தியர்கள் பண பரிவர்த்தனை மேற்கொள்வது, பொருட்களை வாங்குவது தொடர்பாக இந்திய வருமான வரித்துறை (Income Tax Of India) சில விதிகளை அமலில் வைத்துள்ளது. இந்த நிலையில், இந்த விதிகளில் வருமான வரித்துறை மாற்றம் செய்துள்ளது. இந்த மாற்றம் செய்யப்பட்ட விதிகள் ஏப்ரல் 01, 2026 அன்று அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில், அமலுக்கு வரும் புதிய விதிகள் என்ன என்ன, என்ன என்ன மாற்றாங்கள் வர உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்
- வருமான வரி சட்டத்தின் பிரிவுகள் 819-ல் இருந்து 536 ஆக குறைக்கப்பட உள்ளது.
- கடினமான வார்த்தைகளுக்கு பதிலாக 39 புதிய அட்டவணைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
- HRA சலுகையில் 50 சதவீதம் விலக்கு பெறும் நகரங்கள் 4 ஆக இருந்த நிலையில், அது 8 ஆக உயர்த்தப்பட உள்ளன.
- HRA சலுகை பெற வீட்டு உரிமையாளர், வாடகைதாரர் குறித்த தகவல்கள் இனி கட்டாயமாக்கப்படும்.
- ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்யவும், பணம் எடுக்கவும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- ரூ.5 லட்சத்தும் மேல் மதிப்புள்ள வாகனங்கள் வாங்கினால் அதற்கு கட்டாயம் பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டும்.
- ரூ.1 லட்சத்திற்கும் மேல் ஓட்டல்களில் பணம் கட்டினாலோ, நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்தாலோ பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- ரூ.20 லட்சத்திற்கும் மேலான சொத்து பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- இனி டிஜிட்டல் கரன்சியான கிரிப்ரோ கரன்சி பரிவர்த்தனை விவரங்களை வரி துறைக்கு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- இந்திய ரிசர்வ் வங்கியில் டிஜிட்டல் கரன்சியான சிபிடிசி அங்கீகரிக்கப்பட்ட பண பரிமாற்ற முறையாக சேர்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஏப்ரல் 1 முதல் இந்த வங்கிகளின் ஏடிஎம் விதிகளில் மாற்றம் – கூடுதல் கட்டணம் செலுத்த நேரலாம்!
மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வருமான வரி விதி மாற்றங்களும் ஏப்ரல் 01, 2026 முதல் அமலுக்கு வர உள்ளன.
வருமான வாரி மாற்றங்களால் என்ன நடக்கும்?
இந்த திருத்தப்பட்ட வருமான வரி மாற்றங்கள் விதிகளை மிகவும் எளிதானதாக மாற்றியுள்ளன. இந்த விதிகள் மூலம் பொதுமக்கள் எந்த வகையான சிக்ககளையும் எதிர்கொள்ளாமல் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 01, 2026 அன்று 2026 – 2027 ஆம் நிதியாண்டு தொடங்க உள்ள நிலையில், அன்று முதல் இந்த விதிகளும் அமலுக்கு வந்துவிடும். எனவே பொதுமக்கள் இவற்றை தெரிந்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது.