25 ஆண்டுகள் ஹோம் லோனை 10 ஆண்டுகளில் அடைக்க முடியுமா? எப்படி செய்வது?

Home Loan: இந்தியாவில் சொந்த வீடு என்பது பலருக்கும் கனவு. இதுபோன்ற நேரங்களில் ஹோம் லோன் அவர்களுக்கு கைகொடுக்கிறது. ஆனால் மாதத் தவணை அவர்களுக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது. இந்த நிலையில் 10 ஆண்டுகளில் ஹோம் லோனை எப்படி அடைப்பது என பார்க்கலாம்.

25 ஆண்டுகள் ஹோம் லோனை 10 ஆண்டுகளில் அடைக்க முடியுமா? எப்படி செய்வது?

மாதத் தவணை

Published: 

26 Aug 2025 21:44 PM

சொந்த வீடு என்பது பலரது கனவு. வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் செய்து பார் என சொல்வார்கள். அந்த அளவுக்கு இந்த இரண்டும் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணமாக கருதப்படுகிறது. ஆனால் பல லட்சங்கள் செலவு செய்து எல்லோராலும் வீடு கட்ட முடியாது. அது போன்ற நேரங்களில் ஹோம் லோன்  (Home Loan) நமக்கு பெரிதும் கைகொடுக்கிறது. ஆனால் அதில் உள்ள பிரச்னை, நம் வாழ்க்கையின் பெரும் பகுதி வரை மாதத் தவணை செலுத்த வேண்டும். இது அவர்களுக்கு மிகப்பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தும். குறிப்பாக மாத சம்பளம் வாங்குபவர்கள், தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை தவணையாக செலுத்த வேண்டியிருக்கும். ஹோம் லோன் வாங்கிய ஆரம்ப நாட்களில் பெரும் பகுதி வட்டி மட்டுமே செலுத்த வேண்டியிருக்க வேண்டும். இந்த நிலையில் Repayment Strategy மூலம் 25 ஆண்டுகள் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கலாம் என சொல்கிறார்கள். அது குறித்து பார்க்கலாம்.

வட்டியால் ஏற்படும் மன அழுத்தம்

உதாரணமாக நீங்கள் ரூ.50 லட்சம் ஹோம் லோன் வாங்கியிருக்கிறீர்கள் என எடுத்துக்கொண்டால்,  அதற்கு வட்டிவிகிதம் 8.5 நிர்ணயிக்கப்படும். கடன் காலம் 25 ஆண்டுகள் என்றால் மாதம் ரூ.40,000 செலுத்த வேண்டியிருக்க வேண்டும். ஆனால் 1 ஆண்டுகளில் நாம் ரூ.4.8 லட்சம் செலுத்தியிருப்போம். ஆனால் கடன் தொகையில் இருந்து ரூ.60,000 குறைந்திருக்கும். மீதமுள்ள ரூ.4. லட்சம் வட்டிக்கு மட்டுமே செல்லும். இதனால் கடன் தொகை குறையவில்லை என பலருக்கும் மன அழுத்தம் ஏற்படும்.

இதையும் படிக்க : எவ்வளவு மாத சம்பளம் வாங்கினால் எவ்வளவு ரூபாய் வரை வீட்டு கடன் கிடைக்கும்?.. தெரிந்து கொள்ளுங்கள்!

விரைவில் கடன் அடைப்பதற்கான வழிகள்

வருடத்திற்கு ஒரு கூடுதல் மாதத் தவணை செலுத்துங்கள்

வருடத்திற்கு ஒரு மாதத் தவணை கூடுதலாக செலுத்துவதன் மூலம் கடனை விரைவாக அடைக்கலாம். உதாரணமாக நாம் மாதம் ரூ.40,000 தவணை செலுத்தினால், அந்த ஆண்டு இறுதியில் கூடுதலாக ரூ.40,000 செலுத்துங்கள். இது நேரடியாக நாம் வாங்கிய கடன் தொகையில் குறைய வழிவகுக்கும். இதன் மூலம் 25 ஆண்டுகள் கடனை 20 ஆண்டுகளில் அடைக்க முடியும்.

ஒவ்வொரு ஆண்டும் மாதத் தவணையை அதிகரிக்கவும்

முதல் ஆண்டு ரூ.40,000 மாதத் தவணை செலுத்தினால், அடுத்த ஆண்டு 7.5 சதவிகிதம் கூடுதலாக ரூ. 43.000 மாதத் தவணை செலுத்தலாம். அதற்கு அடுத்த ஆண்டு ரூ.46,200 என ஒவ்வொரு ஆண்டும் நம் சம்பளம் உயர்வதற்கு ஏற்ப மாத தவணையை கூடுதலாக செலுத்தலாம்.  இது கடன் காலமான 25 ஆண்டுகளிில் இருந்து 12 ஆண்டுகள் குறையும்.

இதையும் படிக்க : இந்தியாவில் உள்ள கார் இன்சூரன்ஸ் வகைகள் என்ன? சிறந்ததை தேர்ந்தெடுப்பது எப்படி?

இரண்டு முறைகளையும் பின்பற்றலாம்

ஒவ்வொரு ஆண்டும் கூடுதலா ஒரு மாதத் தவணை செலுத்தலாம். அதே போல ஆண்டுதோறும் 7.5 சதவிகிதம் மாதத் தவணையை அதிகரிக்கலாம். இப்படி இரண்டு முறைகளை பின்பற்றுவதன் மூலம் மாதத் தவணையை 10 ஆண்டுகளில் முழுமையாக முடிக்கலாம். இதனால் வட்டி குறையும்.