ரூ.50,000 சம்பளம் வாங்கும் நபர்கள் எப்படி முதலீடு செய்யலாம்?.. இந்த விதியை பின்பற்றுங்கள்!
Investment Plan For 50000 Rupees Salaried Person | மாத வருமானம் வாங்கும் ஒவ்வொருவரும் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு அல்லது முதலீடு செய்வது எதிர்காலத்தை பாதுகாக்க உதவும். இந்த நிலையில், மாதம் ரூ.50,000 சம்பாதிக்கும் நபர் எப்படி முதலீடு செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
பாதுகாப்பான பொருளாதாரத்தை பெற வேண்டும் என்றால் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. ஆனால், பெரும்பாலான மக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை எப்படி முதலீடு செய்வது என்று தெரியாமல் உள்ளனர். இந்த நிலையில், மாதம் ரூ.50,000 சம்பளம் வாங்கும் நபர் ஒருவர் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரூ.50,000 சம்பளம் வாங்கும் நபர்கள் எப்படி முதலீடு செய்யலாம்?
ரூ.15,000 மாத சம்பளம் வாங்கும் நபர்கள் கூட தங்களது எதிர்காலத்திற்காக சேமிப்பு மற்றும் முதலீடு செய்யலாம். ஆனால், பெரும்பாலான மக்கள் தங்களுக்கு மிகவும் குறைவான வருமானம் தான் உள்ளது. அதனால் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய முடியாது என நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. சரியான திட்டமிடல் இருக்கும் பட்சத்தில் முதலீடு செய்து பொருளாதாரத்தை மிகவும் வலிமையானதாக மாற்ற முடியும்.
இதையும் படிங்க : பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு?.. அரசு வட்டாரங்கள் கூறுவது என்ன?
வருமானத்தை பிரித்து முதலீடு செய்ய வேண்டும்
சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு ஒரு சிறந்த திட்டம் ஒன்று உள்ளது. அதுதான் வருமானத்தை சதவீதமாக பிரித்து கையாள்வது. அதாவது, ஒருவர் மாதம் பெறும் வருமானத்தில் 60 முதல் 65 சதவீதம் பணத்தை தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மீதமுள்ள 20 முதல் 25 சதவீதம் பணத்தை சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 10 முதல் 15 சதவீதம் பணத்தை இன்சூரன்ஸ் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் முன்பதிவில் வந்த முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன?
பெரும்பாலான பொதுமக்கள் தாங்கள் சேமிக்கும் மொத்த பணத்தையும் செலவு செய்து விடுவர். இதன் காரணமாக தான் அவர்களால் தங்களது பொருளாதாரத்தை பாதுகாப்பானதாக மாற்ற முடிவதில்லை. அதே சமயம் அவர்களது பொருளாதாரம் வளர்ச்சி அடையாமலே உள்ளது. எனவே ரூ.15,000 முதல் என எவ்வளவு மாத வருமானம் பெற்றாலும் அதற்கு ஏற்ப குறைந்தபட்ச தொகையையாவது முதலீட்டுக்காக எடுத்து வைக்க வேண்டும்.
சிறிய தொகையாக இருந்தாலும், அதனை நீண்ட ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் பட்சத்தில் சிறந்த லாபத்தை பெற முடியும். எனவே சம்பாதிக்கும் பணத்தை எதிர்கால பாதுகாப்பாக முதலீடு செய்வது மிகவும் சிறந்த நிதி நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.