Home Loan : வீட்டு கடனை சுலபமாக அடைக்க சில டிப்ஸ்.. கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க!
Tips For Easy Home Loan Repayment | பெரும்பாலான நபர்கள் வீட்டு கடன் வாங்கி தான் தங்களது சொந்த வீடு கனவை நிறைவேற்றிக்கொள்வர். ஆனால், அந்த கடனை திருப்பி செலுத்தும்போது அதிக தொகையை திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர். இந்த நிலையில், வீட்டு கடனை மிக சுலபமாக அடைப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்தியர்களை பொருத்தவரை சொந்த வீடு ஒரு மிகப்பெரிய கனவாக உள்ளது. அது ஒரு சிறந்த முதலீடு மற்றும் பாதுகாப்பகவும் உள்ளது. ஆனால், அதற்கு அதிக பணமும் செலவாகும். இந்த நிலையில் தான் தங்களது சொந்த வீடு கனவை நினைவாக்க பலரும் வங்கியில் வீட்டு கடனை பெறுகின்றனர். ஆனால், கடனை அடைக்க கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். காரணம் வீட்டு கடனை திருப்பி செலுத்தும்போது வட்டியுடன் செலுத்த வேண்டும். பெற்ற கடனில் பகுதி அளவு வட்டிக்கே சென்றுவிடும். இதன் காரணமாக பலரும் ஆண்டு கணக்கில் வீட்டு கடனை திருப்பி செலுத்தி வருகின்றன. ஆனால், இந்த சில விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் வீட்டு கடனை மிக சுலபமாக அடைக்கலாம்.
அதிகமான டவுன் பேமெண்ட் செலுத்த வேண்டும்
ஆரம்பத்தில் அதிக அளவு டவுன் பேமெண்ட் (Down Payment) செலுத்துவது குறைந்த கடனை திருப்பி செலுத்த உதவியாக இருக்கும். குறைவாக கடன் செலுத்தும் பட்சத்தில் அது பொருளாதார சிக்கல்களில் இருந்து நாம் பாதுகாப்பாக இருக்கவும் உதவும். அவ்வாறு குறைந்த அளவு கடனுக்கு வட்டி கணக்கிடும் பட்சத்தில் அதுவும் மிகவும் குறைவானதாக இருக்கும்.
இதையும் படிங்க : திருமண பரிசு பொருட்களுக்கு வரி விதிக்கப்படுமா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாத தவணையை அதிகரித்தல்
ஒவ்வொரு ஆண்டும் சப்மள உயர்வு பெற்ற உடன் உங்களது மாத ஊதிய அதிகரிக்கும். இந்த நிலையில், நீங்கள் வீட்டு கடனுக்கு செலுத்தும் மாத தவணை தொகையையும் அதிகரிக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் ரூ.60 லட்சம் வீட்டு கடன் பெற்றுள்ளீர்கள் அதனை 20 ஆண்டுகளுக்குள் 8 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். இந்த சூழலில் நீங்கம் மாதம் ரூ.49,894 செலுத்த வேண்டும். இதன் மூல்ம நீங்கள் ரூ.1.20 கோடி பணத்தை திருப்பி செலுத்த வேண்டும். இதுவே நீங்கள் ரூ.10,000 அதிகரிகத்து செலுத்தும் பட்சத்தில் நீங்கள் மாதம்தோறும் ரூ.59,894 செலுத்த நேரிடும். இதன் மூலம் நீங்கள் 14 ஆண்டுகளில் உங்களது கடனை செலுத்தி முடித்திவிடலாம். இதன் மூலம் நீங்கள் ரூ.21 லட்சம் சேமிக்க முடியும்.
இதையும் படிங்க : உங்கள் UAN எண்ணுடன் தவறான மெம்பர் ஐடி இணைக்கப்பட்டுள்ளதா?.. சுலபமா Delink செய்யலாம்!
கடன் பெறுவதற்கு முன்பு யோசிக்க வேண்டிய விஷயம்
நீங்கள் வங்கிகளில் வீட்டு கடன் பெறுவதற்கு முன்னதாக யோசிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அதுதான் வட்டி. நீங்கள் 8 சதவீதம் வட்டியுள்ள கடனுக்கு பதிலாக 7.8 சதவீதம் வட்டியுள்ள கடனை பெற்றால் உங்களது மாத தவணை குறையும். அதாவது ரூ.49,894-க்கு பதிலாக ரூ.49,154 ஆக குறையும். இதன் மூலம் நீங்கள் ரூ. 1.20 கோடிக்கு பதிலாக ரூ.1.17 கோடி செலுத்தினால் போதும்.