ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி.. அதிரடியாக விலை குறைந்த 33 உயிர் காக்கும் மருந்துகள்!
GST Rate Cut Reduces Prices of Essential Medicines | மத்திய அரசு நான்கு அடுக்குகளுக்கான ஜிஎஸ்டி வரொ விதிப்பை வெறும் 2 அடுக்காகளாக குறைத்துள்ளது. இந்த நிலையில் 33 உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்ட 375 பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
மத்திய அரசு (Central Government) ஜிஎஸ்டி (GST – Goods and Services Tax) வரி விதிப்பு முறையை குறைத்து அறிவித்த நிலையில் அது இன்று (செப்டம்பர் 22, 2025) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த வரி விதிப்பு மாற்றத்தின் காரணமாக பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ளது. அதாவது சமையல் அறையில் பயன்படுத்தும் பொருட்கள் முதல் மின்சாதன பொருட்கள், மருந்து பொருட்கள் என சுமார் 375 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதில் 33 உயிர் காக்கும் மருந்துகளின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமலுக்கு வந்த ஜிஎஸ்டி 2.0 – விலை குறைந்த பொருட்கள்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் (Indian Prime Minister Narendra Modi) குடியரசு தின உரையை தொடர்ந்து நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு நான்கு அடுக்குகளாக இருக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை இரண்டு அடுக்குகளாக குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். அமைச்சரின் அறிவிப்பின் படி புதிய வரி விதிப்பு முறை இன்று (செப்டம்பர் 22, 2025) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக பல அத்தியாவசிய மற்றும் மருந்து பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்றம் எதிரொலி.. பால் முதல் ஐஸ் கிரீம் வரை 700 பொருட்களின் விலையை அதிரடியாக குறைத்த அமுல்!
33 உயிர் காக்கும் மருந்துகளின் விலை குறைந்தது
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம் காரணமாக சில உயிர் காக்கும் மருந்து பொருட்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்து உள்ளிட்ட அரிய வகை நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மூன்று முக்கிய உயிர் காக்கும் மருந்துகளின் விலை பெரும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. 12 சதவீதமாக இருந்த பல மருந்து பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி பெறும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஜிஎஸ்டி வரி குறைப்பு…. அதிரடியாக விலை குறையும் ரயில் நீர் – எவ்வளவு தெரியுமா?
வேறு என்ன என்ன பொருட்கள் விலை குறைந்துள்ளது?
- தலைக்கு தேய்க்கும் எண்ணெய், குளியல் சோப்புகள், ஷாம்பூ, டூத்பிரஷ், டூத் பேஸ்ட் உள்ளிட்ட பொருட்களின் ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- மிதிவண்டிக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- சமையலறை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றின் ஜிஎஸ்டி 12 மற்றும் 18 சதவீதத்தில் இருந்து வெறும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- யூஎச்டி பாலுக்கான ஜிஎஸ்டி முற்றிலுமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பாலுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது முற்றிலுமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
- சென்னா, பன்னீர் உள்ளிட்ட பொருட்களின் ஜிஎஸ்டி 5 சதவீதமாக உள்ள நிலையில், தற்போது முற்றிலுமாக ஜிஎஸ்டி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.