மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரே நாளில் எகிறியது.. இன்றைய நிலவரம் என்ன?..

Gold price: போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்தவகையில், மார்ச் 31ம் தேதியான நேற்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 13,670க்கும், ஒரு சவரன் 1,09,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரே நாளில் எகிறியது.. இன்றைய நிலவரம் என்ன?..

கோப்புப் புகைப்படம்

Updated On: 

01 Apr 2026 11:07 AM

 IST

Gold Price Today: மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்தது. பிறகு நடுவில் தொடர்ச்சியாக குறைந்து வந்த தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்தது. இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து முதலீட்டாளர்கள், நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஒரு மாத காலமாக கடுமையான போர் நீடித்து வருகிறது. இதன் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எழுந்துள்ளன.

இதையும் படிக்க: வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கம் வைத்திருந்தால் சிக்கல்?.. நேரடி வரிகள் வாரியம் கூறுவது என்ன?

நேற்று விலை குறைந்த தங்கம்:

குறிப்பாக ஈரான் போரால் உலக அளவில் புவிசார் பதற்றங்கள் நிலவி வருகின்றன. இவற்றின் காரணமாக தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்தவகையில், மார்ச் 31ம் தேதியான நேற்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 13,670க்கும்,  சவரனுக்கு 800 குறைந்து ஒரு சவரன் 1,09,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று உச்சம் தொட்ட தங்கம் விலை:

இந்நிலையில், இன்று விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 380 உயர்ந்து ஒரு கிராம் 14,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 3,040 உயர்ந்து ஒரு சவரன் 1,12,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு 15 உயர்ந்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், கிலோவுக்கு 15,000 உயர்ந்து ஒரு கிலோ 2,65,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

இதையும் படிங்க: உங்கள் மொத்த வருமானத்தையும் EMI குடித்துவிடுகிறதா?.. இந்த சில விஷயங்களை கட்டாயம் பின்பற்றுங்கள்!

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை:

தேதி  ஒரு கிராம்  ஒரு சவரன் 
23 மார்ச் 2026 ரூ.13,340 ரூ.1,06,720
24 மார்ச் 2026 ரூ.13,250 ரூ.1,06,000
25 மார்ச் 2026 ரூ.13,600 ரூ.1,08,800
26 மார்ச் 2026 ரூ.13,350 ரூ.1,06,800
27 மார்ச் 2026 ரூ.13,430 ரூ.1,07,440
28 மார்ச் 2026 ரூ.13,660 ரூ.1,09,280
29 மார்ச் 2026 ரூ.13,660 ரூ.1,09,280
30 மார்ச் 2026 ரூ.13,770 ரூ.1,10,160
31 மார்ச் 2026 ரூ.13,670 ரூ.1,09,360
1 ஏப்ரல் 2026 ரூ.14,050 ரூ.1,12,400

 

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..