தமிழ் புத்தாண்டில் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. சவரனுக்கு இவ்வளவு உயர்வா?.. இன்றைய நிலவரம்!!

Gold Price: சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து தற்போது 1,10,000ஐ தாண்டியுள்ளது. சர்வதேச சந்தையில் மற்ற முக்கிய நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு இன்று சரிவடைந்துள்ளது. டாலர் மதிப்பு குறையும் போது, முதலீட்டாளர்களுக்கு தங்கம் வாங்குவது மலிவாகத் தெரிவதால் அதன் தேவை அதிகரித்து விலை உயர்கிறது.

தமிழ் புத்தாண்டில் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. சவரனுக்கு இவ்வளவு உயர்வா?.. இன்றைய நிலவரம்!!

மாதிரி புகைப்படம்

Updated On: 

14 Apr 2026 12:02 PM

 IST

Gold Price Today: தமிழ்புத்தாண்டு தினமான இன்று தங்கம் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, தற்போது மீண்டும் உயர்வைச் சந்தித்துள்ளது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து தற்போது 1,10,000ஐ தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

இதையும் படிக்க : ஏப்ரல் 14 முதல் 19 வரை.. 4 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை.. செக் பண்ணுங்க!

தங்கம் விலை உயர்வு:

நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,060க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,480க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 160 உயர்ந்து, ஒரு கிராம் 14,220க்கும், சவரனுக்கு 1,280 உயர்ந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை 1,13,760 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை உயர்வு:

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் கிராமுக்கு 5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை 265 ரூபாய்க்கும், கிலோ வெள்ளி 2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டாலர் மதிப்பு சரிவு:

சர்வதேச சந்தையில் மற்ற முக்கிய நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு இன்று சரிவடைந்துள்ளது. டாலர் மதிப்பு குறையும் போது, முதலீட்டாளர்களுக்கு தங்கம் வாங்குவது மலிவாகத் தெரிவதால் அதன் தேவை அதிகரித்து விலை உயர்கிறது. குறிப்பாக மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மையால், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.

இதையும் படிக்க : இபிஎஃப்ஓவில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.10,900 கோடி.. உங்கள் பணத்தை எடுக்க இது கட்டாயம்!

இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது இருப்புக்காகத் தங்கத்தைத் தொடர்ந்து அதிக அளவில் கொள்முதல் செய்து வருவது உலகளவில் அதன் விலையைத் தக்கவைக்க அல்லது உயர்த்த காரணமாகிறது.

Follow Us
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்