Gold : தீபாவளிக்கு தங்கம் வாங்க முடியாதா?.. தங்கம் விலை உயர்வின் தாக்கம் என்னவாக இருக்கும்?

Higher Gold Price | தற்போதைய காலக்கட்டத்தில் தங்கம் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. அதாவது ஒரு கிராம் தங்கம் ரூ.10,000-த்தை தாண்டியும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக பண்டிகை காலங்களில் தங்கம் நுகர்வு குறைவாக இருக்குமோ என்ற சூழல் உருவாகியுள்ளது.

Gold : தீபாவளிக்கு தங்கம் வாங்க முடியாதா?.. தங்கம் விலை உயர்வின் தாக்கம் என்னவாக இருக்கும்?

மாதிரி புகைப்படம்

Updated On: 

10 Sep 2025 13:54 PM

 IST

தங்கம் விலை மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ரூ.10,000-த்தை தாண்டியும், ஒரு சவரன் ரூ. 1 லட்சத்தை தாண்டியிம் விற்பனை செய்யப்படுகிறது. இதே நிலை நீடித்தால் தங்கம் சாமானிய மக்களின் எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் உள்ளது. இந்தியாவில் அடுத்தடுத்து தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் வரவு உள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் தங்கத்தின் நுகர்வு எப்படி இருக்கும் என்பது குறித்து வணிகர்கள் மற்றும் வல்லுநர்கள் சில முக்கிய தகவல்களை கூறியுள்ளனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ள தங்கம்

2024 ஆம் ஆண்டு தங்கம் விலை 30 சதவீதம் வரை உயர்வு பெற்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில், 2025-ல் 45 சதவீதம் வரை தங்கம் விலை உயரும் என கூறப்படுகிறது. தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவது, நிலையற்ற உலக பொருளாதாரம், முதலீட்டாளர்கள் தங்களத்தில் அதிகமாக முதலீடு செய்வது உள்ளிட்டவை காரணமாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் கிராம் ரூ.10,150-க்கும், சவரன் ரூ.81,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, இதுவரை இல்லாத உச்சத்தில் தங்கம் விலை உள்ளது.

இதையும் படிங்க : மீண்டும் மீண்டும் ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.81,000-த்தை தாண்டியது!

எதிர்வரும் பண்டிகை காலங்கள் – தங்கம் விற்பனையில் மந்தம் ஏற்படுமா?

இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் அதிக திருமணங்கள் நடைபெறும். பொதுவாக பண்டிகை காலங்கள் மற்றும் திருமணத்திற்கு பொதுமக்கள் தங்க நகைகளை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், தங்கத்தின் கடுமையான விலை உயர்வு காரணமாக இந்த பண்டிகை காலத்தில் பொதுமக்கள் தங்கம் வாங்குவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், தங்கம் இந்திய பாரம்பரியத்துடன் இணைந்துள்ள நிலையில், தங்கம் வாங்கும் அளவு குறைய வாய்ப்பு இருந்தாலும், பொதுமக்கள் மத்தியில் தங்கம் வாங்குவதில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என வணிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க : GST 2.0 : ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் வரும் மாற்றம்.. தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா?

தங்கம் கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ள நிலையில், இனி வரும் காலங்களில் குறைந்த எடை கொண்ட தங்க நகைகள் மற்றும் வெள்ளி ஆபரணங்களின் நுகர்வு அதிகமாக இருக்கும் என்றும் வணிகர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.