Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நகை பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

Gold Price Rapidly Reduced on October 3, 2025 | தொடர் விலை உயர்வுக்கு மத்தியில் தங்கம் இன்று (அக்டோபர் 03, 2025) அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதாவது இன்று ஒரே நாளில் மட்டு தங்கம் ரூ.880 வரை குறைந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 03 Oct 2025 12:11 PM IST

சென்னை, அக்டோபர் 03 : தங்கம் கடந்த சில மாதங்களாகவே கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று (அக்டோபர் 03, 2025) தங்கம் அதிரடியாக விலை குறைந்துள்ளது. இன்றைய தினம் மட்டுமே தங்கம் விலை (Gold Price) ரூ.1,000 வரை குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் 22 காரட் தங்கம்  10,840-க்கும் , ஒரு சவரன் ரூ.86,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வரலாறு காணாத உச்சத்தில் விற்பனை செய்யப்படும் தங்கம்

தங்கம் விலை இதுவரை இல்லாத கடுமையான உச்சத்தில் உள்ளது. 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விகை கடுமையான விலை உயர்வை அடைந்து வருகிறது. செப்டம்பர் 6, 2025 அன்று தங்கம் விலை முதல் முறையாக ரூ.80,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது தங்கம் விலை ரூ.86,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு.. ஒப்புதல் வழங்கிய அரசு!

அதிரடியாக குறைந்த தங்கம் விலை

  • 24 செப்டம்பர் 2025 – ஒரு கிராம் ரூ.10,600, ஒரு சவரன் ரூ.84,800
  • 25 செப்டம்பர் 2025 – ஒரு கிராம் ரூ.10,510, ஒரு சவரன் ரூ.84,080
  • 26 செப்டம்பர் 2025 – ஒரு கிராம் ரூ.10,550, ஒரு சவரன் ரூ.84,400
  • 27 செப்டம்பர் 2025 – ஒரு கிராம் ரூ.10,640, ஒரு சவரன் ரூ.85,120
  • 28 செப்டம்பர் 2025 – ஒரு கிராம் ரூ.10,640, ஒரு சவரன் ரூ.84,120
  • 29 செப்டம்பர் 2025 – ஒரு கிராம் ரூ.10,770, ஒரு சவரன் ரூ.86,160
  • 30 செப்டம்பர் 2025 – ஒரு கிராம் ரூ.10,860, ஒரு சவரன் ரூ.86,880
  • 01 அக்டோபர் 2025 – ஒரு கிராம் ரூ.10,950, ஒரு சவரன் ரூ.87,600
  • 02 அக்டோபர் 2025 – ஒரு கிராம் ரூ.10,950, ஒரு சவரன் ரூ.87,600
  • 03 அக்டோபர் 2025 – ஒரு கிராம் ரூ.10,840, ஒரு சவரன் ரூ.86,720

இதையும் படிங்க : Post Office Scheme : மாற்றமில்லை.. அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை நிலவரம்

நேற்று (அக்டோபர் 02, 2025) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,950-க்கும் ஒரு சவரன் ரூ.87,600-க்கும் விற்பனை செய்யபபட்டது. இந்த நிலையில், இன்று (அக்டோபர் 03, 2025) தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதாவது தங்கம் கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம்  ரூ.10,840-க்கு, சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.86,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.880 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.