Gold Price : ஒரே நாளில் ரூ.1,040 சரிந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் குறைந்தது!
Gold Price Reduced 1040 Rupees Per Sovereign | ஈரான் போர் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை நாளுக்கு நாள் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.1,040 சரிந்துள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஏப்ரல் 07 : ஈரான் போர் (Iran War) காரணமாக தங்கம் விலை (Gold Price) மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 07, 2026) சரிவை சந்தித்துள்ளது. அதாவது தங்கம் கிராமுக்கு ரூ.130 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஈரான் போரால் ஏற்ற, இறக்கங்களை சந்திக்கும் தங்கம்
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் மிக கடுமையான போர் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. காரணம், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதன் காரணமாக உலக நாடுகள் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை எதிர்க்கொண்டுள்ளன.
இதையும் படிங்க : ஒரு ஆண்டு பணியாற்றினாலே கிராஜுவிட்டி தொகை கிடைக்கும் – இந்த விதி யாருக்கு பொருந்தும்?
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிக கடுமையான உயர்வை சந்தித்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, புவிசார் பதற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1,040 சரிவை சந்தித்துள்ளது.
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.13,860-க்கும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.255-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : அரசின் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்பு இந்த விஷயங்களை நோட் பண்ணுங்க!
காலையில் சரிந்து, மாலையில் உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் நேற்று காலை 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ.13,810-க்கும், சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், மாலை தங்கம் அதிரடியாக உயர்ந்தது. அதாவது 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,990-க்கும், சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.