தொடர்ந்து 2 நாட்களாக உயர்ந்த தங்கம் விலை.. இனியும் உயருமா?.. பொருளாதார வல்லுநர்கள் கூறுவது என்ன?

Gold Price Increased For Second Day In Chennai | சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் சீரான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கடும் விலை உயர்வை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் மேலும் விலை உயருமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர்ந்து 2 நாட்களாக உயர்ந்த தங்கம் விலை.. இனியும் உயருமா?.. பொருளாதார வல்லுநர்கள் கூறுவது என்ன?

மாதிரி புகைப்படம்

Published: 

23 Feb 2026 17:08 PM

 IST

தங்கம் (Gold) கடந்த சில நாட்களாக சீரான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தொடர் விலை உயர்வை சந்தித்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.15,000-த்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில், தங்கத்தின் திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன, இனி வரும் நாட்களிலும் தங்கம் மேலும் விலை உயருமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சீரான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம்

2026, ஜனவரி மாதத்தில் புவிசார் பதற்றங்கள் அதிகரித்து காணப்பட்டதன் காரணமாக ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18,000 வரை சென்றது. ஆனால், ஜனவரி 29, 2026 அன்று பிறகு நிலமை அப்படியே தலை கீழாக மாறிவிட்டது. அதாவது தங்கம்  விலை படிப்படியாக குறைந்து ரூ.14,000 என்ற அளவில் சீராக விற்பனை செய்யப்பட்டு வந்தது. புவிசார் பதற்றங்கள் குறைந்ததே அதற்கு காரணம் என பொருளாதார வள்ளுநர்கள் கூறினர். இது சாமானிய மக்களுக்கு சற்று ஆதரவளித்த நிலையில், தற்போது தங்கம் மீண்டும் உயர்வை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கிறது.

இதையும் படிங்க : பழைய தங்கத்தை மாற்றலாமா, விற்பனை செய்யலாமா?.. இரண்டில் எது பெஸ்ட்!

இரண்டு நாட்களாக தொடர் உயர்வை சந்தித்த தங்கம்

ஜனவரி 29, 2026 முதல் சீராக விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம், கடந்த இரண்டு நாட்களில் கடும் விலை உயர்வை சந்தித்துள்ளது. குறிப்பாக பிப்ரவரி 21, 2026 அன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.14,680-க்கும், சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல, இன்று (பிப்ரவரி 23, 2026) தங்கம் இரண்டாவது நாளாக தொடர் உயர்வை சந்தித்துள்ளது. இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 உயர்ந்து இரு கிராம் ரூ.14,860-க்கும், சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : இரவோடு இரவாக ஷாக் கொடுத்த டிரம்ப்.. உலகளாவிய வரியை 10% முதல் 15% ஆக உயர்த்தியுள்ளார்!

தங்கம் விலை உயர்வுக்கு டிரம்ப் தான் காரணம்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலக நாடுகள் மீது விதித்த இறக்குமதி வரியை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், டிரம்ப் 15 சதவீதம் உலகளாவிய வரியை அறிவித்துள்ளார். இதுவே தங்கம் மற்றும் வெள்ளி மீண்டு விலை உயர்வை சந்தித்ததற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. டிரம்ப் மேலும் புதிய வரிகளை அறிமுகம் செய்யும் பட்சத்தில் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!