வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை.. தடாலடியாக குறைந்தது!!

Gold price fallen: வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கட்கிழமை) தங்கத்தின் விலையானது சற்று குறைந்து ஆறுதல் அளித்துள்ளது. அந்தவகையில், சென்னையில் இன்று 22 கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைந்து 14,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,19,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை.. தடாலடியாக குறைந்தது!!

கோப்புப் புகைப்படம்

Updated On: 

09 Mar 2026 10:43 AM

 IST

கடந்த வாரத்தில் 5 நாட்களாக தங்கத்தின் விலையானது தொடர்ந்து குறைந்து முதலீட்டாளர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் மகிழ்ச்சி கொடுத்த நிலையில், வாரத்தின் இறுதி நாளான கடந்த சனிக்கிழமை தங்கம் விலை திடீரென உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கட்கிழமை) தங்கத்தின் விலையானது சற்று குறைந்து ஆறுதல் அளித்துள்ளது. அந்தவகையில், சென்னையில் இன்று 22 கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைந்து 14,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,19,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளியின் விலையானது எந்தவித மாற்றமும் இன்றி கிராம் ஒன்று 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: போர் நெருக்கடி.. அதிரடியாக உயர்ந்த கச்சா எண்ணெய்.. பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் வருமா?

கடந்த ஆண்டு இறுதி முதல் உச்சத்தில் தங்கம் விலை:

2025ம் ஆண்டு இறுதியில் ஏறத்தொடங்கிய தங்கம் விலை, 2026 ஜனவரி மாதத்திலும் பல முறை புதிய புதிய உச்சத்தை தொட்டு வந்தது. தொடர்ந்து, பிப்ரவரி மாதத்தில் ஏற்ற இறக்கத்தில் இருந்த நிலையில், மார்ச் மாத தொடக்கத்தில் போர் காரணமாக மீண்டும் உச்சம் தொட தொடங்கியது. எனினும், அதன் பின்னர் படிப்படியாக மீண்டும் தங்கம் விலை இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. அந்தவகையில், நேற்று முன்தினம் (சனிக்கிழமை) ஒரு கிராம் 15,050 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,20,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் மட்டும் கிராமுக்கு 90ரூபாயும், சவரனுக்கு 720 ரூபாயும் உயர்ந்தது.

புதிய உச்சம் தொட்ட ஒரு சவரன் தங்கம் விலை:

டாலருக்கு நிகராக தங்கள் நாட்டின் பணத்தின் மதிப்பை அதிகரிக்க மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. இதனால் தங்கம் விலை கடந்த மாதம் புதிய உச்சமாக ஒரு சவரன் ரூபாய் 1.34 லட்சத்தை தொட்டது. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே தங்கம் விலை அடுத்தடுத்து குறைய தொடங்கியது. இந்த சூழலில் தான் ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக தங்கம் விலையானது எந்த நேரத்திலும் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மார்ச் மாதத்தில் தங்கம் விலை நிலவரம்:

தேதி கிராம் சவரன்
01 மார்ச் 2026 ரூ.15,775 ரூ.1,26,200
02 மார்ச் 2026 ரூ.15,660 ரூ.1,25,280
03 மார்ச் 2026 ரூ.15,465 ரூ.1,23,720
04 மார்ச் 2026 ரூ.15,200 ரூ.1,21,600
05 மார்ச் 2026 ரூ.15,120 ரூ.1,20,960
06 மார்ச் 2026 ரூ.14,960 ரூ.1,19,680
07 மார்ச் 2026 ரூ.15,050 ரூ.1,20,400
09 மார்ச் 2026 ரூ.14,950 ரூ.1,19,600

இதையும் படிங்க: PPF, SSY திட்டங்களில் முதலீடு செய்கிறீர்களா?.. மார்ச் 31-க்குள் இதையெல்லாம் செய்யவில்லை என்றால் சிக்கல்!

வாரத்தின் முதல் நாளை குறைந்த தங்கம் விலை:

இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலையானது சற்று குறைந்து ஆறுதல் அளித்துள்ளது. அந்தவகையில், சென்னையில் இன்று 22 கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைந்து 14,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,19,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளியின் விலையானது எந்தவித மாற்றமும் இன்றி கிராம் ஒன்று 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us
ஹார்முஸ் கடல் வழியை மூடுவதாக ஈரான் அறிவிப்பு - பரபரப்பு தகவல்
இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் நீரில் மூழ்கிய ஈரானின் போர் கப்பல் - 87 பேர் பலி
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் - பெட்ரோல், டீல் விலை அதிகரிக்குமா?
குவைத் துறைமுகத்தில் எண்ணெய் டேங்கர் அருகில் வெடிப்பு