மீண்டும் சரிந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ. 5,360 குறைந்து விற்பனை.. மகிழ்ச்சியில் மக்கள்..

Gold Price: இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரண (22 கேரட்) தங்கத்தின் விலை ரூ.270 குறைந்து ரூ.14,300க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு சவரன் ரூ.2,160 குறைந்து ரூ.1,14,400க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் கணிசமாக குறைந்தது.

மீண்டும் சரிந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ. 5,360 குறைந்து விற்பனை.. மகிழ்ச்சியில் மக்கள்..

கோப்பு புகைப்படம்

Updated On: 

19 Mar 2026 18:11 PM

 IST

சென்னை, மார்ச் 19, 2026: தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. கடந்த மாதம் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,20,000 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது படிப்படியாக சரிந்து, ஒரு சவரன் கணிசமாக குறைந்துள்ளது. மார்ச் 19, 2026 தேதியான இன்று, இரண்டாவது முறையாக தங்கம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, ஒரு கிராமுக்கு ரூ.670 குறைந்துள்ளது. அதேபோல், ஒரு சவரனுக்கு ரூ.5,360 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.270 குறைந்து ரூ.14,300க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு சவரன் ரூ.2,160 குறைந்து ரூ.1,14,400க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் கணிசமாக குறைந்தது. அந்த வகையில், ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.265க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பெண்களுக்கு அதிக லாபம் தரும் அசத்தல் திட்டங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

தொடர்ந்து சரிவில் தங்கம் விலை:

மார்ச் 12ஆம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த ஏழு நாட்களில் மட்டும், தங்கம் ஒரு கிராமுக்கு கிட்டத்தட்ட ரூ.1,500 வரை குறைந்துள்ளது. அதேபோல், ஒரு சவரனுக்கு கிட்டத்தட்ட ரூ.10,000 வரை குறைந்துள்ளது.

5,360 ரூபாய் வரை குறைந்த விலை:

மார்ச் 19, 2026 தேதியான இன்று மாலை நிலவரப்படி, மீண்டும் ஒருமுறை தங்கம் விலை குறைந்துள்ளது. அந்த வகையில், ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.13,900க்கும், ஒரு சவரன் ரூ.1,11,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,163க்கும், ஒரு சவரன் ரூ.1,21,304க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், காலை நிலவரப்படி ஒரு கிராம் ரூ.265க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு இவ்வளவா?.. இன்றைய விலை நிலவரம்!!

தங்கம் மற்றும் வெள்ளி விலை வரக்கூடிய நாட்களில் மேலும் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை சரிவில் இருந்து வருவதால், பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஒரு சவரன் தங்கம் ரூ.1,00,000 ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்