Gold Price : ஒரே நாளில் ரூ.1,200 சரிந்த தங்கம் விலை.. வெள்ளி விலையில் மாற்றமில்லை!

Gold and Silver Price Today | சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்த நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : ஒரே நாளில் ரூ.1,200 சரிந்த தங்கம் விலை.. வெள்ளி விலையில் மாற்றமில்லை!

மாதிரி புகைப்படம்

Updated On: 

17 Apr 2026 10:38 AM

 IST

சென்னை, ஏப்ரல் 17 : ஈரான் போர் (Iran War) எதிரொலியாக தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold and Silver Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் போரால் நிலையற்ற தன்மையில் தங்கம் மற்றும் வெள்ளி

ஈரான் போர் காரணமாக உலக அளவில் பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோ, டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட சிக்கல்களை உலக நாடுகள் எதிர்க்கொண்டுள்ளன. இவை அனைத்தும் புவிசார் பதற்றத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய அசாத்தியமான சூழல் நிலவி வரும் நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய குழப்பகாம மாறியுள்ளது.

இதையும் படிங்க : யுபிஐ மூலம் பணம் அனுப்புவதால் சிபில் ஸ்கோர் பாதிக்குமா? உண்மை என்ன?

புவிசார் பதற்றங்கள் காரணமாக தங்கத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக தங்கம் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து நிலையற்ற தன்மையில் உள்ளது. இந்த நிலையில், சென்னையில் நேற்று (ஏப்ரல் 16, 2026) தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

இன்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.14,120-க்கும், சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2,75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி