Gold Price : ட்விஸ்ட் அடித்த தங்கம், வெள்ளி.. இன்றைய நிலவரம் என்ன?

Gold and Silver Price In Chennai Today | ஈரான் போர் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : ட்விஸ்ட் அடித்த தங்கம், வெள்ளி.. இன்றைய நிலவரம் என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

04 May 2026 11:07 AM

 IST

சென்னை, மே 03 : மேற்கு ஆசியா போர் (West Asia War) காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold and Silver Price) தொடர்ந்து மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆனால், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் உள்ளது. இந்த நிலையில், சென்னையின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம்

ஈரான் போர் காரணமாக உலக அளவில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என உலக நாடுகள் மிக கடுமையான சிக்கல்களை எதிர்க்கொண்டன. இவ்வாறு உலக அளவில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வரும் நிலையில், உலக முதலீட்டாளர்கள் மத்தியில் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்துள்ளது. இதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் முன்பதிவில் வந்த முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன?

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று தங்கம் விலையில் மாற்றமிலை. இன்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,000-க்கும், ஒரு சவரன் ரூ.112,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..