Gold Price : ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. ரூ.1,280 சரிவு!

Gold and Silver Price Reduced In Chennai | ஈரான் போருக்கு மத்தியில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து வரும் நிலையில், இன்றும் (மார்ச் 06, 2026) தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. ரூ.1,280 சரிவு!

மாதிரி புகைப்படம்

Updated On: 

06 Mar 2026 10:31 AM

 IST

சென்னை, மார்ச் 06 : ஈரான் மீதான போருக்கு மத்தியில் தங்கம் (Gold) மற்றும் வெள்ளி (Silver) விலை குறைந்து வரும் நிலையில், இன்று (மார்ச் 06, 2026) தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 குறைந்தும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் போருக்கு மத்தியில் குறையும் தங்கம் விலை

பிப்ரவரி 28, 2026 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களின் போது ஈரானின் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளை ஈரான் தாக்கி வருகிறது. கமேனியின் மரணத்திற்கு தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் உறுதியாக உள்ள நிலையில், நெருக்கடி கொடுக்கும் பல நடவடிக்கைகளை ஈரான் மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க : 2026-ல் இபிஎஃப்ஓ வட்டி விகிதம் 8.25% ஆகவே தொடரும்.. காரணம் இதுதான்!

அந்த வகையில் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. உலகின் மிக முக்கிய எண்ணெய் எடுத்துச் செல்லும் கப்பல் வழித்தடமாக ஹோர்முஸ் உள்ள நிலையில், ஈரானின் இந்த நடவடிக்கை காரணமாக எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக தற்போது அனைவரது கவனமும் எண்ணெய் மீது உள்ள நிலையில், தங்கம் விலை குறைந்து வருகிறது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

இன்று (மார்ச் 06, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.160 குறைந்து ஒரு கிராம் ரூ.14,960-க்கும், ஒரு சவரன் ரூ.1,19,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.290-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் ரூ.1,280 சரிவை சந்தித்துள்ள நிலையில், சென்னையில் மீண்டும் தங்கம் ஒரு கிராம் ரூ.14,960-க்கு கீழ் சென்றுள்ளது.

Follow Us
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி