Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒரே நாளில் அதிரடியாக சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை.. நிம்மதி பெருமூச்சு விட்ட சாமானியர்கள்!

Gold and Silver Price Cut In Chennai | சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வந்த நிலையில், இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒரே நாளில் அதிரடியாக சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை.. நிம்மதி பெருமூச்சு விட்ட சாமானியர்கள்!
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Jan 2026 10:52 AM IST

சென்னை, ஜனவரி 30 : சென்னையில் நேற்று (ஜனவரி 29, 2026) தங்கம் (Gold) மற்றும் வெள்ளி (Silver) மிக கடுமையான விலை உயர்வை சந்தித்த நிலையில், இன்று (ஜனவரி 30, 2026) அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதாவது இன்று ஒரே நாளில் தங்கம் கிராமுக்கு ரூ.600 மற்றும் வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. தொடர் உயர்வுக்கு மத்தியில் தங்கம் மற்றும் வெள்ளி சரிவை சந்தித்துள்ளது சாமானிய மக்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாமானியர்களின் எட்டா கனியாக மாறி வந்த தங்கம்

சென்னையில் ஜனவரி 01, 2026 அன்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.12,380-க்கும், ஒரு சவரன் ரூ.99,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், நாளடைவில் தங்கம் மிக கடுமையான விலை உயர்வை அடைய தொடங்கியது. ஜனவரி மாத தொடக்கத்தில் அமெரிக்கா, வெனிசுலா அதிபரை கைது செய்து சிறையில் அடைத்தது, ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது ஆகிய்வை புவிசார் பதற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தன. இதன் காரணமாக முதலீட்டாளர்களின் முழு கவனமும் தங்கத்தின் மீது திரும்பியது. அதுமட்டுமன்றி, உலக வங்கிகளும் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கிவிட்டன. இதன் காரணமாக தங்கம் தொடர் விலை உச்சத்தில் இருந்து வந்தது.

இதையும் படிங்க : உச்சத்தில் தங்கம் விலை.. மேலும் விலை உயருமா?.. இடியை இறக்கிய நிறுவனங்கள்!

ஒரே வாரத்தில் உச்சம் தொட்டம் தங்கம் விலை

தேதி  ஒரு கிராம்  ஒரு சவரன் 
24 ஜனவரி 2026 ரூ.14,750 ரூ.1,18,000
25 ஜனவரி 2026 ரூ.14,750 ரூ.1,18,000
26 ஜனவரி 2026 ரூ.15,025 ரூ.1,20,200
27 ஜனவரி 2026 ரூ.14,960 ரூ.1,19,680
28 ஜனவரி 2026 ரூ.15,610 ரூ.1,24,880
29 ஜனவரி 2026 ரூ.16,800 ரூ.1,34,400
30 ஜனவரி 2026 ரூ.16,200 ரூ.1,29,600

ஒரே நாளி அதிரடியாக சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி

சென்னையில் இன்று (ஜனவரி 30, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.600 குறைந்து ஒரு கிராம் ரூ.16,200-க்கும், சவரனுக்கு ரூ.4,800 குறைந்து ஒரு சவரன் 1,29,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.415-க்கும், ஒரு கிலோ ரூ.4,15,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.