Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தொடர்ந்து உயரும் மருத்துவ செலவுகள்.. 2026 பட்ஜெட்டில் தீர்வு கிடைக்குமா?

Medical Expenses Expectation On Union Budget 2026 | பிப்ரவரி 1, 2026 அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அது குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன. அந்த வகையில், மருத்துவ செலவுகளை குறைப்பதற்கான அறிவிப்பை பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Jan 2026 15:32 PM IST
பிப்ரவரி 1, 2026 அன்று 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், மருத்துவ காப்பீட்டு பிரீமியம் மற்றும் மருத்துவ சிகிச்சை செலவுகள் ஆகியவற்றை ஒழுங்குப்படுத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என பொதுமக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

1 / 5
இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைக்கு 2020-ல் ரூ.30.1 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், 2024-ல் அது ரூ.50.8 லட்சமாக உயர்ந்தது. இதேபோல இருதய மாற்று அறுவை சிகிச்சைக்க்கான கட்டணம் ரூ.20.5 லட்சமாக இருந்த நிலையில், அது ரூ.34 லட்சமாக உயர்ந்தது. மேலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான கட்டணம் ரூ.10.8 லட்சத்தில் இருந்து ரூ.18.2 லட்சமாக உயர்ந்துள்ளது.

2 / 5
இந்தியாவின் மருத்துவ பணவீக்கம் ஆண்டுக்கு 12 முதல் 15 சதவீதமாக உள்ளது. இது ஆசியாவிலேயே அதிகபட்சமான பண வீக்க அளவாக உள்ளது. இது செலவுக்கும், காப்பீட்டுக்கும் இடையே பெரிய இடைவெளியை உருவாக்குகிறது. இதன் காரணமாக அதிக அளவிலான குடும்பங்கள் போதுமாக காப்பீடு இல்லாமல் உள்ளன.

3 / 5
இந்தியாவின் மருத்துவ பணவீக்கம் உலக அளவில் அதிகமானதாக உள்ளது. இதில் சரியான நேரத்தில், குறிப்பிடத்தக்க ஒழுங்குமுறை மற்றும் தலையிடல்கள் இல்லை என்றால் இதே நிலை நீடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளதாக கூறப்படுகிறது.

4 / 5
எனவே, செலவுகளை கட்டுப்படுத்த நிலையான பில்லிங் நடைமுறைகளை வகுப்பது, குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் நடைமுறைகளுக்கான விலைளை ஆய்வு செய்வது உள்ளிட்ட வழிகளை ஆராய அரசு மருத்துவமனைகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Budget

5 / 5