தங்கத்தில் இப்படி முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.. வல்லுநர்கள் கூறும் சூப்பர் டிப்ஸ்!

Best Way to Invest in Gold | 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் மற்றும் வெள்ளி போட்டி போட்டுக்கொண்டு விலை ஏறி வருகிறது. இந்த நிலையில், தங்கத்தில் அதிக பலன்களை பெற எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

தங்கத்தில் இப்படி முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.. வல்லுநர்கள் கூறும் சூப்பர் டிப்ஸ்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

12 Oct 2025 21:38 PM

 IST

2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் (Gold) மற்றும் வெள்ளி (Silver) அதிரடி விலை உயர்வை கண்டு வருகிறது. குறிப்பாக தங்கம் 45 சதவீதம் விலை உயர்வை சந்தித்துள்ள நிலையில், வெள்ளி 50 சதவீதம் விலை உயர்வை சந்தித்துள்ளது. இவ்வாறு தங்கம் மற்றும் வெள்ளி அபார விலை உயர்வை சந்தித்துள்ள நிலையில், எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு தங்கம் நல்ல லாபம் தரும் என்ற எண்ணத்தில் பலரும் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில், அதிக லாபம் பெறும் வகையில் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சிறந்த முறையில் முதலீடு செய்வது எப்படி?

இந்தியாவை பொருத்தவரை இரண்டு பயன்பாட்டிற்காக பொதுமக்கள் தங்கம் வாங்குகின்றனர். ஒன்று உடலில் அணிகலன்களாக அணிந்துக்கொள்வது, மற்றொன்று அவசர தேவைகளுக்கு அந்த தங்க நகைகளை அடகு வைத்து பணமாக பெற்று நிதி தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்வது. காலம் காலமாக இந்த முறையை பயன்படுத்தி இந்தியர்கள் தங்கம் வாங்கும் நிலையில், தங்கத்தில் முறையாக எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் சில விதிகளை கூறுகின்றனர்.

இதையும் படிங்க : Gold Price: எகிறும் தங்கம் விலை.. அதிரடி விலை உயர்வுக்கு காரணம் என்ன..?

இவர்கள் தங்க நகை வாங்க வேண்டாம்

பொதுவாக தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் பெரும்பாலான பொதுமக்கள் தங்க நகை, தங்க நாணயங்களை வாங்கி தான் சேமிக்கின்றனர். ஆனால், பொருளாதார வல்லுநர்கள் முற்றிலும் வேறுபட்ட கருத்தை கூறுகின்றனர். அதாவது, தங்கத்தை அணிகலனாக அணிய விரும்பும் நபர்கள் மட்டுமே தங்கம் வாங்க வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். தங்கத்தை அணிந்துக்கொள்வதில் விருப்பமில்லை ஆனால், தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என நினைக்கும் நபர்கள் ஈடிஎஃப் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்று கூறுகின்றனர்.

இதையும் படிங்க : தனிநபர் கடன் வாங்க போறீங்களா?.. இந்த 5 தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!

தங்கத்தை நகையாக வாங்கும்போது அதற்கு செய்கூலி, சேதாரம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றை செலுத்த வேண்டும். ஆனால் தங்க ஈடிஎஃப் (ETF – Exchange Trade Funds) முதலீட்டில் அத்தகைய கூடுதல் பணம் எதையும் செலுத்த வேண்டாம். முதலீடு செய்யும் மொத்த பணமும் தங்கத்தின் மீது முதலீடு செய்யப்படும். இதனால் தங்க நகைகள் மற்றும் நாணயங்களை வாங்குவதை விட ஈடிஎஃப்பில் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.