டிசம்பர் 31-ல் கிக் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.. அமேசான், ஸ்விக்கி உள்ளிட்ட ஊழியர்கள் எடுத்த முக்கிய முடிவு!

Gig Workers Announced Strike On December 31, 2025 | பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய அங்கமாக உள்ளவை தான் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள். இந்த நிலையில் தான் டிசம்பர் 31, 2025 அன்று அமேசான் உள்ளிட்ட கிக் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

டிசம்பர் 31-ல் கிக் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.. அமேசான், ஸ்விக்கி உள்ளிட்ட ஊழியர்கள் எடுத்த முக்கிய முடிவு!

கோப்பு புகைப்படம்

Updated On: 

28 Dec 2025 15:35 PM

 IST

தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளை கடைசி நேர டெலிவரி செயலிகள் (Last Minute Delivery App) மூலம் பூர்த்தி செய்துக்கொள்கின்றனர். வீட்டு உபயோக பொருட்கள், உணவு பொருட்கள் என அனைத்து தேவைகளையும் செயலிகள் மூலம் பூர்த்தி செய்துக்கொள்கின்றனர். கடைசி நேர டெலிவரி செயலிகள் பொதுமக்களின் அன்றட வாழ்வின் அங்கமாக மாறிவிட்ட நிலையில், உணவு மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களான அமேசான் (Amazon), சொமேட்டோ (Zomato), ஸ்விக்கி (Swiggy), செப்டோ (Zepto), பிளிங்கிட் (Blinkit), பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய தளங்கள் டிசம்பர் 31, 2025 அன்று தேசிய அளவிலான வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. அதன் காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ள கிக் தொழிலாளர்கள்

அமேசா, பிளிப்கார்ட், ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று அதாவது டிசம்பர் 25, 2025 அன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்று வலியுறுத்திய அதே கோரிக்கைகளை முன்வைத்து டிசம்பர் 31, 2025 அன்று ஜிக் தொழிலாளர்கள் (Gig Workers) போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். நிறுவனங்களை தங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தும் விதமாக இந்த போராட்டத்தை அவர்கள் கையில் எடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : Year Ender 2025: அமேசான் முதல் ஃபிளிப்கார்ட் வரை… இ-காமர்ஸ் துறையில் அசூர வளர்ச்சி – காரணம் என்ன?

போராட்டத்தை அறிவித்த கிக் தொழிலாளர்கள்

செயலிகளை மையப்படுத்திய போக்குவரத்து ஊழியர்கள், தொழிலாளர்கள் அமைப்பு மற்றும் தெலங்கானா கிக் தொழிலாளர்கள் இணைந்து இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். மெட்ரோ நகரங்களில் உள்ள கிக் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். விரைவாக டெலிவரி செய்ய வலியுறுத்தும் நிறுவனங்கள் அதற்கான உரிய ஊதியம் வழங்குவதில்லை என்றும், ஒழுங்கற்ற வேலை முறை உள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க : January 2026 : கிரெடிட் ஸ்டோர் முதல் ஆதார் – பான் இணைப்பு வரை.. ஜனவரி மாதம் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

டெலிவரி நேரத்தை மிக குறைவானதாக குறைத்துவிட்டதாகவும், ஆனால் அதற்கான முறையான ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தங்களது கோரிக்கைக்களை நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த தொடர் போராட்டங்களை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி ஆதாருடன் APAAR ஐடியும் கட்டாயம்.. CET தேர்வகர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு
2025 ஆம் ஆண்டு எப்படி இருந்தது? இணையத்தில் வைரலாகும் சமந்தா பகிர்ந்த புகைப்படங்கள்..
முதல்முறையாக வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!
2025ல் ஸ்விகியில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு எது தெரியுமா?